Best Hair Growth Booster in Tamil
பொதுவாக நமக்கு தலைமுடி வளர வேண்டுமென்று நினைத்தால் நாம் அதிகமாக ஹேர் பேக் மற்றும் ஷாம்பு, எண்ணெய் தான் தலைக்கு பயன்படுத்துவார்கள். அதேபோல் ஒவ்வொரு முறையும் ஹேர் பேக் போடும் போது ஒவ்வொரு விதமாக பொருட்களை கொண்டு ஹேர் பேக் போடுவார்கள். ஆனால் இந்த பதிவின் வாயிலாக எந்த ஹேர் பேக் பற்றியும் உங்களுக்கு பரிந்துரை செய்யப்போவதில்லை. இந்த ஹேர் பேக் போட முடியாதவர்கள் கூட இந்த ஒரு தண்ணீரை மட்டும் பயன்படுத்துங்கள். அப்போது தான் உங்கள் முடி நீளமாகவும் கருமையாகவும் அடர்தியாகவும் வர வைக்கும்.
உடனே அனைவரும் யோசிப்பது நீங்கள் சொல்லும் பொருட்கள் அனைத்தும் அதிக விலையாக இருக்கும். ஆகவே அதனை செய்வது கஷ்டம் என்று யோசிப்பீர்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அனைவரும் இதை செய்யலாம். அதேபோல் இது அனைத்து வீடுகளில் கிடைக்கும் பொருட்கள் ஆகும். அதனால் இதனை ஈசியாக செய்யலாம். சரி வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best Hair Growth Booster in Tamil:
முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் பிரியாணி இலை. இந்த பிரியாணி இலையில் ஆன்டி பாக்டீரியல் உள்ளது. இந்த சத்துக்கள் முடியில் உள்ள அரிப்புக்களை சரி செய்யும். அதனால் பிரியாணி இலை 5 எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து இந்த முடியை வளரவைக்க எடுத்துக்கொள்ள போகும் பொருள் தான் கொய்யா இலை. இந்த கொய்யா இலை முடி கொட்டுவதை தடுக்கும். அதேபோல் முடியை சுத்தமாகவும் வைத்துக்கொள்ள இந்த கொய்யா இலை உதவியாக இருக்கும். முக்கியமாக பொடுகு வராமல் தடுக்கும்.
அடுத்து நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் அரிசி ஆகும். அரிசியில் பச்சை அரிசியை தவிர எந்த அரிசியை வேண்டுமாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த அரிசியில் ஸ்டார்ச் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் தலை முடி நீளமாக வளர வைக்கும். அதனால் குழி கரண்டியால் 4 கரண்டி எடுத்து ஊற வைக்கவும்.
பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்
செய்முறை:
முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும் அதில் பிரியாணி இலை, கொய்யா இலை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அடுத்து அதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். அதன் பின்பு அதனை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அடுத்து அரிசி ஊறவைத்த தண்ணீர் எடுத்து அதனை தனியாக வைக்கவும், இப்போது இந்த தண்ணீர் கொய்யா இலை, பிரியாணி இலை இரண்டியும் சேர்த்து கலந்துகொள்ளவும் இப்போது பூஸ்டர் ரெடி..
மலை பாம்பு போல் நீளமாக முடி வளர வேண்டுமா அப்போ வாரத்திற்கு 1 முறை இதை செய்தால் போதும்
நீங்கள் எப்போதும் போல் தலையை குளிப்பது போல் குளிக்கவும். அதேபோல் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளித்துக் கொள்ளலாம்.
அடுத்து தலையில் தண்ணீர் இல்லாமல் தலையை பிழிந்து அதன் பின்பு ஹேர் பூஸ்டரை எடுத்து தலையில் அப்ளை செய்து தலையை மசாஜ் செய்வது போல் அலசி அதனை பின்பு அப்படியே தலையை துவட்டிக்கொள்ளம். இந்த ஹேர் பூஸ்டர் தண்ணீரை தலைக்கு ஊற்றிய பிறகு வெறும் தண்ணீரை தலையில் ஊற்றக்கூடாது..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |