இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை வெள்ளையாக்கலாம்

body whitening natural tips in tamil

உடல் முழுவதும் வெள்ளையாக மாற

வணக்கம் நண்பர்களே இன்றைய அழகு குறிப்பு பதிவில் உடல் முழுவதும் வெள்ளையாக ஒரு அருமையான குறிப்பு பற்றித் தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக ஒரு குழந்தை  கருப்பாக பிறந்தால், அவர்களின் அம்மா அப்பாவின் நிறம் எப்படி இருக்கிறதோ அதே போல் தான் குழந்தைகள் பிறக்கும், ஆனால் ஒரு சிலருக்கு குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும், இதனால் குழந்தை கருவில் இருக்கும் பொழுதே, வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று குங்குமம் பூ போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால், பிறந்த சில மாதங்கள் கழித்து அம்மா அப்பா, நிறத்தில் தான் மாறிவிடும், எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகத்தை வெள்ளையாக்குவதற்கு ஒரு அருமையான குறிப்பை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

முகத்தை வெள்ளையாக்க உங்கள் வீட்டில் டீ போடும் சர்க்கரை போதும்..!

இயற்கையாக முகம் வெள்ளையாக:

தேவையான பொருட்கள்:

  1. பன்னீர் ரோஜா இதழ்- தேவையான அளவு 
  2. தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் பன்னீர் ரோஜாவை எடுத்துக்கொண்டு, அதனுடை இதழ்களை பிரித்து தண்ணீரில் நன்றாக கழுவி அதை வடிகட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு வடிகட்டிய ரோஜாக்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைக்க வேண்டும், கடாய் சூடானதும்,  அதில் நீங்கள் ஒரு கப் அளவிற்கு ரோஜா இதழ்கள் எடுத்தால், அதே அளவு தேங்காய் எண்ணெய் எடுக்க வேண்டும். ஒரு கப் தேங்காய் எண்ணெயை  கடாயில் சேர்க்க வேண்டும், அதன் பிறகு அரைத்து வைத்த ரோஜா இதழ்களை அதில் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

ஸ்டேப்:3

ரோஜா இதழ்களை அதில் சேர்த்து கிளறிவிடும் பொழுது,  அந்த எண்ணெய் பொன்நிறம்  வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும். ரோஜா இதழ்கள் கருப்பு நிறத்திலும், எண்ணெய்  பொன்னிறத்திலும் வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.

ஸ்டேப்:4

அடுப்பை அணைத்த பிறகு, ஒரு நாள் முழுவதும் அந்த கடாயில் அந்த எண்ணெய்களை அப்படியே ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு நாள் ஆனதும், ஒரு காட்டன் துணிகளை கொண்டு அந்த எண்ணெயை வடிகட்டி, ஒரு கண்ணாடி  பாட்டிலில் வைக்க வேண்டும். இந்த எண்ணெய் 2 வருடம் வரையும் கெட்டு  போகாமல் இருக்கும். இப்பொழுது இந்த ரோஜா தைலம் தயார்,  இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

ரோஜா தைலம் பயன்படுத்தும் முறை:

இந்த ரோஜா பூ தைலத்தை  யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்,  இந்த தைலம் இயற்கை முறையில் செய்வதினால், குழந்தைகளுக்கு பயமில்லாமல் பயன்படுத்தலாம், குறிப்பாக முக பிரச்சனைகளான, முகப்பரு, கருவளையம், தழும்புகள், போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.  இந்த ரோஜா தைலத்தை குளிப்பதற்கு முன்பு மசாஜ் செய்து விட்டு குளிப்பதால், கருமைகள் எல்லாம் நீங்கி ஒரே வாரத்தில் கலர் பெறுவீர்கள். இதனை நீங்களும் செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வெயிலில் கருத்து போன உங்கள் முகத்தை பளிச்சென்று                                   வைக்க இதை follow பண்ணுங்க…!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami