முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க..!

Advertisement

Dark Spots Removal Face Home Remedies in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் அதில் அந்தளவிற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. முக அழகுக்கென்றே தனியாக ஒரு நேரத்தை செலவிடுவார்கள். அப்படி பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் கரும்புள்ளிகளும் ஓன்று.

பெரும்பாலும் பருக்கள் தான் கரும்புள்ளிகளாக மாறுகிறது. நாமும் இந்த கரும்புள்ளிகளை மறைய செய்வதற்காக பல கிரீம்களை வாங்கி பயன்ப்படுத்தி இருப்போம். ஆனால் அதனால் மேலும் பாதிப்புகள் தான் வருகிறது என்று சொல்லி புலம்புபவரா நீங்கள். அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க நண்பர்களே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்:

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும். பின் அதன் தோலை நீக்கி விட்டு அதை காய் சீவும் கட்டையில் வைத்து சீவி தனியாக எடுத்து கொள்ளவும்.

உருளைகிழங்கில் பல ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவி செய்கிறது. கரும்புள்ளிகள், முக கருமை, கழுத்து கருமை போன்றவற்றை போக்குவதற்கு உருளைக்கிழங்கு பயன்படுகிறது.

முடி அனைத்தும் வெள்ளையாக இருந்தாலும் சரி அதை கருமையாக மாற்ற இந்த பூ மட்டும் போதும்

பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்:

பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு பால் ஊற்றி கொள்ள வேண்டும். அடுத்து பால் சூடானதும் அதில் நாம் சீவி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு கொதிக்க விடவும்.

நாம் சேர்த்த பாலும் உருளைக்கிழங்கும் பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். பேஸ்ட் போல வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்

அப்ளை செய்யும் முறை:

நாம் எடுத்த வைத்துள்ள பேஸ்ட்டில் 2 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். முக கருமை நீங்கி உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும். 

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement