தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை இப்படி பயன்படுத்துங்கள்..!

Advertisement

தலைமுடிக்கு முட்டை வெள்ளை கரு..! Egg Hair Care Tips in Tamil..!

நமது அன்றாட வாழ்க்கையில் முட்டையை நாம் அதிகளவு பயன்படுத்திக்கிறோம். முட்டையில் அதிகளவு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த முட்டை சரும அழகிற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் அதிகளவு பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் நமக்கு கொஞ்ச நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க இந்த பதிவில் தலைமுடி வளர்ச்சிக்கு முட்டையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி கீழ் பார்க்கலாம். பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..

இதையும் படியுங்கள் ⇒ தலையில் சொட்டை விழுந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவுங்க.. அப்பறம் முடி எப்படி வளருதுன்னு பாருங்க ..

முட்டை வெள்ளை கரு + தேங்காய் எண்ணெய் – Egg With Coconut Oil for Hair Benefits:

ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 1/2 மணி நேரம் கழித்து மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை செய்து வந்தால் தலைமுடிக்கு நீங்கள் எந்த ஒரு பராமரிப்பு முறையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. முடி மிகவும் சாப்டாக, பளபளப்பாக இருக்கும்.

முட்டை வெள்ளை கரு + ஆலிவ் எண்ணெய் தலைக்கு – Egg With Olive Oil for Hair Growth:

egg with olive oil for hair growth

முட்டையின் வெள்ளை கருவுடன், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையை தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து தலை முடிக்கு மையிலேடு ஷாம்பு பயன்படுத்தி நன்றாக தலை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் தலை முடி வறண்டு போவது தடுக்கப்படுகிறது, மேலும் பொடுகு பிரச்சனை இருந்தாலும் அதனை சரி செய்கிறது. ஆகவே இந்த டிப்ஸை வாரத்தில் ஒருமுறை செய்து வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கப்படும். அதேபோல் அடர்த்தியாகவும் காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

முட்டையின் வெள்ளை கரு + எலுமிச்சை சாறு – Egg With Lemon for Hair:

egg with lemon for hair

மேல் உள்ள இரண்டு டிப்ஸையும் உங்களால் பாலோ செய்யமுடியாது அப்படின்னா.. இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள்.. அதாவது ஒரு பவுலில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு ஸ்பூன் எளிமைச்சை சாறை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவு தான் இந்த கலவையை உங்கள் தலை முடியில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 20 நிமிடம் கழித்து தலை குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் தலையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கிவிடும். தலைமுடி நல்ல போஷாக்குடன் வளர ஆரம்பிக்கும். இந்த டிப்ஸையும் வாரத்தில் ஒரு முறை செயித்தாலே போது ஒரு நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க கூடும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement