உங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும் புருவ முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது .?

Advertisement

புருவ முடி அடர்த்தியாக வளர

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் புருவ முடி அடர்த்தியாக வளர்வதற்கு சில டிப்ஸை பார்ப்போம். உங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பது விழி மட்டும் அல்ல புருவமும் தான். அந்த புருவம் சிறியதாக இருந்தால் நல்லா இருக்குமா. நல்லா இருக்காது. புருவம் முடி அடர்த்தியாக வளர்வதற்கு பார்லர்க்கு செல்வீர்கள். இல்லையென்றால் மருந்துகளை போடுவீர்கள். அப்படி போடும் போது உங்கள் முகத்தில் ஒவ்வாமை ஏற்படும். இனி இந்த மாதிரியெல்லாம் செய்யாமல் வீட்டிலிருந்தே ஈசியா புருவத்தில் முடி அடர்த்தியாக வளர வைக்க முடியும். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

பாதாம் எண்ணெய்:

புருவ முடி அடர்த்தியாக வளர

பாதம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. அதனால் இது முடிக்கு நல்ல சத்துக்களை வழங்கி முடியின் வளர்ச்சியை தூண்டும்.

தினமும் தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய்யை புருவத்தில் தடவுங்கள். இதை இரவு முழுவதும் வைத்திருந்து காலை எழுந்தவுடன் கழுவுங்கள்.

இப்படி தினமும் செய்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.

கற்றாழை பயன்கள் முடி வளர:

கற்றாழை பயன்கள் முடி வளர

கற்றாழையை சீவி அதனுடைய ஜெல்லை எடுத்து வைத்து கொள்ளவும். தினமும் தூங்குவதற்கு முன் கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவுங்கள். இரவு முழுவதும் வைத்திருந்து காலை எழுந்தவுடன் கழுவுங்கள்.

வெந்தயம் முடி வளர:

வெந்தயம் முடி வளர

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால் புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய் முடி வளர:

தேங்காய் எண்ணெய் முடி வளர

தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை தூண்டும். அதனால் தினமும் தேங்காய் எண்ணையை புருவங்களின் மீது தடவுங்கள். அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகும். வேர் நன்கு வலுப்பெற்று முடி அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய் முடி வளர:

விளக்கெண்ணெய் முடி வளர

விளக்கெண்ணெய் இரவு தூங்கும் முன் புருவத்தின் மீது தடவுங்கள். இந்த மாதிரி ஒரு மாதம் செய்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.

மேல் கூறப்பட்டுள்ளதில் எதாவது ஒன்றை தினமும் செய்து வந்தாலே புருவ முடி அடர்த்தியாக வளரும்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!
Advertisement