Face Glowing Home Remedies
முகம் நாள் முழுவதும் பளபளப்பாக இருப்பதற்காக மேக்கப் போடுவார்கள். ஆனால் அந்த மேக்கப் கொஞ்ச நேரம் மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும். சிறிது நேரம் கழித்து முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் உங்கள் முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்து கொள்ள இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகம் பளபளப்பாக என்ன செய்வது:
மஞ்சள்:
மஞ்சளில் ஆக்ஜினேற்ற பண்பு அதிகம் உள்ளது. மஞ்சள் சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமின்றி புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.ஒரு பவுலில் 1/4 கப் கடலை மாவு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு பால், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
தேன்:
தேன் முகத்திற்கு மாய்ஸ்சரைசராகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. முகப்பருக்கள், தழும்புகள் மறைய உதவுகிறது.
முகத்தை சுத்தமாக கழுவிய பின் ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு தேனை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் ஆக்சிஜனேற்றியாக இருக்கிறது. மேலும் இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.
இரவு தூங்குவதற்கு முன் ஆலிவ் எண்ணையை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். இந்த துணியை முகத்தில் கொஞ்ச நேரம் வைத்து வைத்து எடுக்கவும். பிறகு மறுபடியும் வெந்நீரில் நனைத்து முகத்தை துடைக்கவும். இது போல் செய்வதால் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
முகப்பரு வராமல் தடுக்கவும், பரு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிஞ்சுக்கோங்க
ஆரஞ்சு சாறு:
ஆரஞ்சு சாறு வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞ்சு சாறு முகப்பரு வராமல் தடுக்கிறது.
ஒரு பவுலில் ஆரஞ்சு சாறு சிறிதளவு சேர்த்து, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
பால்:
பால் சருமத்தில் உள்ள டைரோசின் அளவை கட்டுப்படுத்தி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
காய்ச்சாத பாலை தினமும் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை:
கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதனால் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முகப்பரு வராமல் தடுக்கிறது.கற்றாழையில் தோலை சீவி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து, பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |