சருமத்தை அழகாக்க தேன் ஃபேஸ் பேக்..! Honey Face Tips In Tamil..!

Advertisement

வறண்ட சருமத்தை மென்மையாக்கும் தேன் அழகு குறிப்பு..! Honey Face Pack For Dry Skin..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தேன் மூலம் வறண்ட சருமத்தை(Honey Face Pack Tips) எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். சில பெண்களுக்கு சருமம் எப்போதும் வறண்ட தன்மை போல் அல்லது முகம் பொலிவிழந்து காட்சியளிக்கும். அது போன்று இருக்கும் பிரச்சனையை சரி செய்ய இன்றைய பொதுநலம் பதிவில் ஒரு ஈஸியான டிப்ஸை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

newஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..!

வறண்ட சருமம் அழகு பெற:

தேவையான பொருட்கள்:

  1. தேன் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  2. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 1/2 டேபிள் ஸ்பூன் 

தேன் மற்றும் மஞ்சள் அழகு குறிப்பு:

முதலில் ஒரு பவுலில் 1/2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேனை எடுத்துக்கொள்ளவும். அடுத்து இந்த தேனுடன் மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

முகம் பளிச்சென்று இருக்க தேன்:

தேனுடன் மஞ்சள் தூள் சேர்த்த பிறகு கற்றாழை ஜெல் 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பேஸ்ட் போல் வந்த பிறகு உடலில் வறண்ட சருமம் காணப்படும் இடத்தில் இந்த தேன் ஃபேஸ் பேக்கை தடவ வேண்டும்.

newமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

சருமத்தை அழகாக மாற்றும் தேன்:

பேஸ்டை தடவிய பிறகு 15 அல்லது 20 நிமிடம் கழித்து இதை வாஷ் செய்து கொள்ளலாம். வாஷ் செய்த பிறகு உங்களுடைய சருமம் மற்றும் தோல் பகுதியானது எப்போதும் ஃப்ரெஷாக இருக்கும்.

குறிப்பு:

தேன் எப்போதும் முக அழகை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். தேனில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் தன்மை நிறைந்துள்ளது. தேனானது உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும்.

தேன் உடலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும் ஒரு சிறப்பான இயற்கை மருந்தாகும். வறண்டு காணப்படும் சருமத்தை முற்றிலும் நீக்கிவிடும் தன்மை கொண்டுள்ளது.

newமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement