24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Face Whitening and Glowing Tips at Home in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகம் எப்பொழுதுமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். அதற்கான பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் நாம் முகத்தை பளபளப்பாக மாற்ற மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் பயனளிக்காமல் போய் விடுகின்றது.

அதனால் தான் இன்றைய பதிவில் 24 மணிநேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க உதவும் குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Tips at Home in Tamil:

Face Whitening Tips at Home in Tamil

24 மணிநேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பினை ஒரே ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். இதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. ஆரஞ்சு பழத்தோல் – 1 கைப்பிடி அளவு 
  2. பாதாம் – 20 
  3. ஆவாரம் பூ – 1 கைப்பிடி அளவு 
  4. கஸ்தூரி மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 

ஆரஞ்சு பழத்தோலை காய வைக்கவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆரஞ்சு பழத்தோலை நன்கு சுத்தம் செய்து விட்டு வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஆவாரம் பூவை காய வைத்து கொள்ளவும்:

அதே போல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆவாரம் பூவையும் நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> அடிக்கிற வெயிலில் உங்களின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க போதும்

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

இப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் காய வைத்து எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு ஆரஞ்சு பழத்தோல், 1 கைப்பிடி அளவு ஆவாரம் பூ மற்றும் 20 பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நன்கு சலித்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

கஸ்தூரி மஞ்சள் தூளினை கலக்கவும்:

நாம் தயாரித்து வைத்துள்ள பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து நல்ல குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் 24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil