கருப்பாக பிறந்துவிட்டோம் என்று கவலைப்படுகிறீர்களா.! இனி கவலையை விடுங்க அதற்கான சூப்பர் ஐடியா..!

face whitening natural tips in tamil

முகம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கருப்பாக பிறந்துவிட்டோம் என்று கவலைப்படுவார்கள். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று நினைப்பார்கள். வெள்ளையாக இருப்பதற்கு கடைகளில் விற்கும் கிரீம்களை பயன்படுத்துவார்கள். அதனால் முகத்தில் ஒவ்வாமை ஏற்படும். இயற்கையாக எந்த பொருளை பயன்படுத்தினாலும் முகத்திற்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை அழகாகவும், கலராகவும் ஆக்கலாம். வாங்க எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக

முகம் வெள்ளையாக தேவையான பொருட்கள்:

உளுந்து -தேவையான அளவு

வெந்தயம் – தேவையான அளவு

செய்முறை:1

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி உளுந்து, 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து இரண்டையும் கழுவி கொள்ளுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குறைந்தது 5 மணி நேரம் ஊற வேண்டும். முதல் நாள் இரவே ஊற வைப்பது சிறந்தது.

பின் ஊற வைத்த இரண்டு பொருட்களையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பின் அரைத்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள். 30 நிமிடம் வரைக்கும் அப்படியே முகத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த பேஸ் பேக் போட்டு முகத்தை கழுவிய பிறகு சோப்பு போட்டு முகத்தை கழுவ கூடாது. இது போல் வாரத்திற்கு இரண்டு முறை இப்படி பயன்படுத்துங்கள். விரைவிலே முகம் வெள்ளையாக மாறி  விடும்.

இயற்கையாகவே உளுந்தும், வெந்தயமும் சரும நிறத்தை அதிகரிக்கும். அதனால் இந்த பேஸ் பேக்கை அப்ளை செய்யுங்கள்.

செய்முறை :2 

தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு பாதி  தக்காளியை எடுத்து அதில் சீனியை தடவி கொள்ளவும். பின் சீனி தடவி வைத்த தக்காளியை முகத்தில் மசாஜ் செய்யவும். ஒரு 20 நிமிடம் அப்படியே விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

செய்முறை:3

புதினா இலையை எடுத்து கழுவி கொள்ளுங்கள். அந்த புதினா இலையை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே முகத்தில் இருக்கட்டும். காலையில் எழுந்து முகத்தை தண்ணீரில் கழுவி விடுங்கள். இப்படி செய்வதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகத்தை கலராக ஆக்கும்.

செய்முறை:4 

ஐஸ் கட்டி எடுத்து கொள்ளுங்கள். அதை இரவு தூங்குவதற்கு முன்பு ஐஸ் கட்டியை முகத்தில் தடவுங்கள். ஒரு 1/2 மணி முகத்தில் அப்படியே இருக்கட்டும். பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் விரைவிலே முகம் வெள்ளையாக மாறிவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami