Full Body Skin Whitening Tips
அழகாக இருக்க வேண்டும் என்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே ஆசைப்படுகிறார்கள். அதுபோல கருப்பாக இருப்பவர்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வெள்ளையாக மாற வேண்டும் என்ற ஆசையில் கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.
அதனால் நம் சருமத்தில் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் மூலம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் வெள்ளையாக மாற்றக்கூடிய டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
உடல் முழுவதும் வெள்ளையாக மாற டிப்ஸ்:
- பச்சை அரிசி – 1/2 கப்
- தயிர் – 2 ஸ்பூன்
- காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்
ஸ்டேப் -1
முதலில் உங்களுக்கு தேவையான அளவு பச்சரிசியை கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப் -2
அரிசி நன்றாக ஊறிய பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் அரிசி ஊறவைத்த தண்ணீர் உடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! |
ஸ்டேப் -3
பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். அடுப்பை குறைத்து வைத்து கொள்ளுங்கள். அந்த தண்ணீர் கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து விட வேண்டும். மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
ஸ்டேப் -4
பின் அதை எடுத்து ஆறவிட வேண்டும். கிரீம் ஆறியதும் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து நன்றாக கொள்ள வேண்டும். பின் அதில் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து விட வேண்டும்.
ஸ்டேப் -5
இப்பொழுது கிரீம் தயார்..! இதை நீங்கள் குளிக்க செல்லும் முன் உங்கள் உடல் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து நீங்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி குளிக்கலாம்.
இதுபோல வாரத்திற்கு 3 முறையோ அல்லது தொடர்ந்தோ செய்து வந்தால் உங்கள் உடல் முழுவதும் வெள்ளையாக மாறிவிடும். இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். பின் உங்களுக்கே நல்ல ரிசல்ட் தெரியும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |