கோதுமை மாவில் மறைந்துள்ள ரகசிய அழகு குறிப்புகள் உங்களுக்கு தெரியுமா..?

Gothumai Mavu Alagu Kurippu in Tamil.

Gothumai Mavu Alagu Kurippu in Tamil..! 

ஹலோ நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் கோதுமை மாவில் உள்ள ரகசிய அழகு குறிப்புகள் பற்றி தான் பார்க்க போகிறோம். அனைத்து வயதினருமே தங்களை அழகுபடுத்த வேண்டும் என்பதை ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தங்களை அழகுபடுத்துவதில் அதிகம் ஆர்வம் உடையவர்கள் பெண்களாகவே இருப்பார்கள். பெண்கள் தங்களை அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனையோ செயல்களை செய்கிறார்கள். அப்படி அழகுபடுத்த வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் பாருங்கள் ⇒  ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! 

கோதுமை மாவு தரும் ரகசிய அழகுக் குறிப்புகள்: 

கோதுமை மாவு பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுபோல இந்த கோதுமை மாவு உடலுக்கு மட்டுமின்றி நம் சருமத்திற்கும் பல நன்மைகளை செய்கிறது. சருமத்தை பொலிவாக வைத்து கொள்கிறது. நம் சருமத்தை பொலிவாகவும் ஜொலிக்க வைப்பதில் கோதுமை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், இது எல்லா வகையான சரும பிரச்சனைகளை தடுக்கிறது. இந்த கோதுமை மாவை பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்தே உங்கள் அழகை மேம்படுத்தலாம். பெண்களின் அழகை மேம்படுத்துவதில் கோதுமை மாவு முதலிடத்தை பிடிக்கிறது. வாங்க நண்பர்களே கோதுமை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

Tips:1

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மற்றும் பால், ரோஸ் வாட்டர் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதுபோல வாரம் 2 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

கருவளையம் மறைய டிப்ஸ்..!கருவளையம் உடனே நீங்க..!

Tips:2

கோதுமை மாவுடன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். பிறகு அதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். அது நன்கு காய்ந்த பின் முகத்தை சுத்தமான நீரை கொண்டு கழுவ வேண்டும். இதுபோல வாரம் 3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

Tips:3

கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதை உங்கள் முகத்தில் பேஸ் பேக் செய்து கொள்ள வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்து வருவதால் சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நீங்கும்.

Tips:4

கோதுமை மாவுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதுபோன்று வாரம் 2 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami