கொய்யா இலையின் முக அழகு ரகசியம் இந்த டிப்ஸ் யாருக்கு தெரியும்

guava leaf face pack in tamil

கொய்யா இலை முகத்திற்கு

ஹாய் நண்பர்களே வணக்கம் பழங்கள் என்றால் அதிகளவு அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் அந்த பழங்களில் நன்மைகள் அதிகம் உள்ளது அதனால் பழங்களை அதிகம் சாப்பிடுவோம். அதேபோல் உடலை பாதுகாக்கிறோமோ இல்லையோ முகம் அழகா இருக்கவேண்டும் என்று அனைவரின் மனதில் உள்ளது அதற்கான தினம் தோரும் ஒவ்வொரு விதமான கீரிம்களை முகத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.

இந்த மாதிரியான க்ரீம்களை பயன்படுத்துவதால் முகத்திற்கு இப்போது வேண்டுமானால் அழகு தரும் பின்பு அது உங்களின் இயற்கையான அழகை கொடுக்காது. முகம் பொலிவை இழந்து காணப்படும். ஆதலால் இயற்கையான முறையில் நீங்கள் சாப்பிடும் கொய்யா பழத்தின் இலையை வைத்து  முகத்திற்கு எப்படி அழகு சேர்க்க போகிறோம் என்ற தான் இது. வாங்க இப்போது அதனை எப்படி செய்ய போகிறோம் என்று தெளிவாக காண்போம்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மீசை முடியை போக்குவதற்கு சில டிப்ஸ்

கொய்யா இலை முகத்திற்கு:

தேவையான பொருட்கள்:

டிப்ஸ் -1

 • கொய்யாஇலை -10 அல்லது 12
 • ரோஸ் வாட்டர் – சிறிதளவு

இப்போது எடுத்து வைத்த கொய்யா இலையை நன்கு நழுவிக்கொள்ளவும். ஒரு ஜாரை எடுத்து அதில் கழுவி வைத்த இலைகளை போட்டு அரைக்கவும்.

பேஸ்டாக மாறிய பின் அதனை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து பின்பு முகத்தில் அப்பளை செய்யவும். செய்த பின் 10 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும். இப்படி செய்வதால் முகம் பொலிவு பெறும். அதேபோல் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும்.

டிப்ஸ் -2

 • கொய்யாஇலை பேஸ்ட் -1 தேக்கரண்டி
 • முட்டையின் வெள்ளைக்கரு – சிறிதளவு

முதலில் இரண்டையும் நன்கு கலந்துகொள்ளவும். பின்பு முகத்தில் அதனை அப்பை செய்யும் போது முடிந்தளவு பிரஸ் பயன்ப்படுத்திக்கொள்ளவும்.

அப்பை செய்த பிறகு முகத்தை 15 நிமிடம் விடவும். முகம் காய்ந்த பின் கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகமா பொலிவு பெறும்.

டிப்ஸ் -3

 • தக்காளி -1
 • ஒரு தேக்கரண்டி கொய்யா இலை பேஸ்ட்

இப்பொது முதலில் தக்காளியை மிக்சியில் போட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு கிண்ணத்தில் கொய்யாஇலை பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும் அதனுடன் அரைத்துவைத்த தக்காளியை சேர்த்து கொள்ளவும். பின்பு இரண்டையும் நன்கு கலந்த பின்பு 7 நிமிடம் ஊறவைக்கவும்.

கடைசியாக முகத்தில் அதனை அப்பை செய்த பிறகு முகம் காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

டிப்ஸ் -4

 • ஒரு தேக்கரண்டி கொய்யா இலை பேஸ்ட்
 • தேன் -சிறிதளவு

இரண்டையும் நன்கு கலந்த பின் முகத்திற்கு அப்பை செய்யவும். சுமார் 10 அல்லது 15 நிமிடம் காயவிடவும் பின்பு குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். இதனை வாரத்திற்கு 2 முறையிற் செய்தல் முகம் அழகு கூடும்.

டிப்ஸ் -5

 • வேப்ப இலை -2
 • மஞ்சள் தூள் 1தேக்கரண்டி
 • கொய்யா இலை 1 தேக்கரண்டி

ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும். மூன்றையும் நன்றாக கலந்த பின் முகத்திற்கு பயன்படுத்தவும். பின்பு கடைசியாக முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும். பின்பு முகம் பிரகாசமாக இருக்கும்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty Tips in Tamil..!