கனவிலும் நினைத்து பார்க்காத அளவிற்கு முடி அடர்த்தியாக வளர வேண்டுமா..! அப்போ இதை ட்ரை பண்ணி பார்க்கலாமே..!

hair grow thicker and hair fall control home remedies in tamil

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்

பொதுவாக யாராக இருந்தாலும் முடி கொட்டுதல் முதல் முடி வளரவில்லை என்ற பிரச்சனை இருந்து வருகிறது. சரி எப்படியாவது அதனை சரி செய்து எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு முடியை வளர வைக்க வேண்டும் என்பது பலருடைய ஒரு கனவாக இருக்கும். அதற்காக என்ன என்னவோ ஹேர் ஆயில், ஹேர் பேக் மற்றும் ஹேர் மாஸ்க் என பயன்படுத்தி இருப்பார்கள். அவற்றை எல்லாம் முழுமையான பலனை அளிக்கவில்லை என்றவுடன் சோர்ந்து போகிருப்பார்கள். இவற்றை எல்லாம் சரிசெய்து ஒரு முற்று புள்ளியை வைப்பதற்கு இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். எப்படி என்றால் முடி உதிர்வை நிறுத்தி நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு முடியை 2 மடங்கு அடர்த்தியாக வளர செய்வதற்கு ஒரு ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Grow Thicker and Hair Fall Control Home Remedies:

தலையில் முடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளர செய்வதற்கு முதலில் ஒரு ஹேர் ஆயில் தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்- 150 மில்லி
  • கிராம்பு- 1 ஸ்பூன்
  • பட்டை- சிறியது

இதையும் படியுங்கள்⇒ வெயிலில் பட்டாலும் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க இதை செஞ்சு பார்த்தீங்களா..!

முடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்:

 முடி அடர்த்தியாக வளர எண்ணெய்

ஸ்டேப்- 1

முதலில் கிராம்பு மற்றும் பட்டையில் ஆன்டி ஆக்ஸைடுகள் அதிக அளவு உள்ளது. அதனால் இதனை நம்முடைய முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர் வரை சென்று முடியை இயற்கையாக அடர்த்தியாக வளர செய்யும்.

அதனால் ஒரு மிக்சி ஜாரில் கிராம்பு மற்றும் பட்டையினை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் 150 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெயை நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து எண்ணெய் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு. அதன் பிறகு அந்த எண்ணெயுடன் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து 2 நிமிடம் அப்படியே வைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 4

2 நிமிடம் கழித்த பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து பொடி கலந்த அந்த எண்ணெயை லேசாக சூடு படுத்து கொண்டு மீண்டும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை கீழே இறக்கி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக எண்ணெய் நன்றாக ஆறியதும் அதனை ஒரு வடிகட்டியால் வடிகட்டி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். அவ்வளவு தான் தலை முடிக்கு எண்ணெய் தயார்.

அப்ளை செய்யும் முறை:

முடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை உங்களுடைய தலையில் உச்சி முதல் நுனி வரை பொறுமையாக நன்றாக அப்ளை இரவு தூங்க சென்று விடுங்கள். அதன் பின்பு மறுநாள் காலையில் எழுந்து வழக்கம் போல தலை தேய்த்து குளித்து விடுங்கள்.

இந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளரும்.

இதையும் படியுங்கள்⇒ Fuction -னுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பேஸ் பேக் போட்டுட்டு போங்க..! செம பிரைட்டா தெரிவிங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil