முடியின் வளர்ச்சியை இரண்டு மடங்கு அதிகரிக்க இந்த ஒரு பொருள் போதும்.!

Advertisement

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க

இன்றைய காலத்தில் உடல் சார்ந்த பிரச்சனைகளை அனைவரும் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான் முடி நீளமாக இல்லை. மேலும் முடி உதிர்ந்து கொண்டே இருக்கின்றது என்று கவலைப்படுவார்கள். அதிலும் திருமணம் வயதில் உள்ள ஆண்களுக்கு சொட்ட விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் அன்றாட வாழ்க்கையில் முடியை சரியாக பராமரிப்பதில்லை. மற்றும் முடியின் வளர்ச்சிக்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இனிமேல் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை சேதப்படுத்தாமல் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை எப்படி அதிகப்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களின் தலை முடியில் இந்த தவறுகளை செய்தால் அவ்ளோ தான்..!

முடி நீளமாக வளர டிப்ஸ்:

முதலில் வெந்தயத்தை ஒருவர் தலைக்கு தேவையான அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளுங்கள். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். 

அடுத்து இஞ்சி சிறிதளவு எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். நறுக்கிய இஞ்சி துண்டுகளை சாறாக பிழிந்து கொள்ளுங்கள்.

பின் அரைத்து வைத்த வெந்தயம் கலவையுடன் இஞ்சி துண்டையும் சேர்த்து நன்றாக கலந்து  கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

தலையில் முதல் நாளே நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். ஏனென்றால் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை இருக்க வேண்டும். பிறகு வெந்தயம் பேஸ்ட்டை தலையில் வேர் கால் முதல் நுனி முடி வரை அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவை அப்ளை செய்து ஒரு 20 நிமிடம் தலையில் அப்படியே ஊறட்டும். பிறகு தலையை அலசி விடுங்கள். பின் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை கொண்டு தன்மையை அலசி விடுங்கள்.

நீங்கள் இந்த தொடர்ந்து அப்ளை செய்து வந்தால்  தலையில் உள்ள பொடுகு நீங்கும். மேலும் முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். 

இதையும் படியுங்கள் ⇒ தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement