சிவப்பழகை பெற குளியல் பொடி செய்வது எப்படி? | Herbal Bath Powder for Skin Whitening in Tamil

Advertisement

குளியல் பொடி தயார் செய்வது எப்படி? | Herbal Bath Powder in Tamil

Kuliyal Powder in tamil: அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, அதுவும் அழகான முகத்தை பெற எல்லோருக்குமே ஆசை உள்ளது. பலர் அழகாக வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதனால் முகம் பொலிவு பெறுகிறதோ இல்லையோ, சருமம் பாதிப்புக்குதான் உள்ளாகிறது. சருமத்தை பாதுகாக்க இனி நீங்கள் கண்ட, கண்ட கிரீம்களை பயன்படுத்த வேண்டாம், முகத்தை பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடம் நிறைந்து கிடக்கின்றது. இதை பயன்படுத்தி நீங்களே முக அழகை பெறலாம். வாங்க எப்படி இயற்கையான முறையில் குளியல் பொடி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – Herbal Bath Powder for Skin Whitening Ingredients in Tamil:

  1. ஆவாரம் பூ – 150 கிராம் (காய வைத்தது)
  2. செம்பருத்தி பூ – 15 (காய வைத்தது)
  3. மரிக்கொழுந்து – 100 கிராம் (காய வைத்தது)
  4. பன்னீர் ரோஜா – 1/2 கிலோ
  5. எலுமிச்சை தோல் – 150 கிராம் (காய வைத்தது)
  6. வெட்டி வேர் – 100 கிராம் (காய வைத்தது)
  7. கோரை கிழங்கு – 50 கிராம்
  8. வசம்பு – 50 கிராம்
  9. மகிழம் பூ – 100 கிராம் (காய வைத்தது)
  10. பாசிப்பயறு – கால் கிலோ
  11. பூலான் கிழங்கு – 100 கிராம்
  12. கார்போக அரிசி – 100 கிராம்

செய்முறை:

ஸ்டேப்: 1

  • How to Make Herbal Bath Powder for Skin Whitening: ஆவாரம் பூ 150 கிராம், செம்பருத்தி பூ 15, மரிக்கொழுந்து 100 கிராம், பன்னீர் ரோஜா 1/2 கிலோ, எலுமிச்சை தோல் 150 கிராம், வெட்டி வேர் 100 கிராம், மகிழம் பூ 100 கிராம் இவற்றை தண்ணீரில் அலசி கொள்ளவும். பின் ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • Herbal Bath Powder for Skin Whitening in Tamil: கோரை கிழங்கு 50 கிராம், வசம்பு 50 கிராம், பாசிப்பயறு கால் கிலோ, பூலான் கிழங்கு 100 கிராம், கார்போக அரிசி 100 கிராம் இவற்றையும் காயவைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3

  • Herbal Bath Powder for Skin Whitening: காய்ந்த பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இதை பெண்கள் மட்டும் உபயோகபடுத்தினால் மஞ்சள் சேர்த்து கொள்ளலாம், ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் சேர்க்க வேண்டாம்.

பயன்கள்:

  • Herbal Bath Powder for Skin Whitening in Tamil: இந்த குளியல் பொடியை போட்டு நீங்கள் குளிப்பதன் மூலம் உடலில் இருக்கும் சொறி, சிரங்கு குணமாகும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள், சருமத்துளை போன்றவை நீங்கி முகம் பளபளக்கும்.
  • இதில் இருக்கும் ஆவாரம் பூ சருமத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கி வெள்ளை நிறத்தை கொடுக்கும். பாசிப்பயறு முகத்திற்கு அழகை கூட்டுவதற்கு உதவும். வியர்வை நாற்றத்தை குறைக்கவும் இந்த குளியல் பொடி உங்களுக்கு உதவும்.

பயன்படுத்தும் முறை:

  • Herbal Bath Powder for Skin Whitening in Tamil: இந்த பொடியை நீங்கள் ரோஸ் வாட்டர் அல்லது தயிர் அல்லது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அரைமணி நேரம் கழித்து இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • சோப் போட்டு குளித்த பின் இந்த குளியல் பொடியை போட்டு குளிக்கலாம், அல்லது சோப்பு சேர்க்காமலும் இந்த பொடியை வைத்து மட்டும் குளிக்கலாம்.
சமையலறையில் உள்ள 3 பொருட்கள் போதும் உடல் முழுவதும் வெள்ளையாக

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000
Advertisement