இனி வீட்டிலையே ஈஸியா Wax ரெடி பன்னலாம்!

home made sugar wax

Home made Sugar Wax in Tamil

பல பெண்கள் மற்றும் ஆண்கள் தேவைற்ற முடிகளை அகற்ற பார்லர் செல்கின்றனர். பார்லர் சென்று தேவையற்ற முடிகளை நீக்க Wax முறையை செய்து கொள்கின்றனர்! பார்லரில் கெமிக்கல் கலந்த Wax கிரீம்களை பயன்படுத்துகின்றனர். அதனால் தோல் அரிப்பு, தோல் எரிச்சல் போன்ற பல தோல் அழற்சிகள் வர நேரிடும். இனி பார்லர் போக தேவையில்லை. 3 பொருட்கள் பயன்படுத்தி வீட்டிலையே இயற்கையான முறையில் Wax தயார்செய்யலாம். இனி வீட்டிலையே Wax கிரீம் தயார் செய்து எவ்வித அழற்சிகளும் ஏற்படாதவாறு தேவையற்ற முடிகளை அகற்றலாம். இப்பதிவில் பார்க்க இருப்பது வீட்டிலையே ஈசியாக Wax எப்படி தயார் செய்வது என்பதனை பற்றித்தான்!

சர்க்கரை Wax தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை – 1 கப்
  • எலுமிச்சை பழம் – 1/2 அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப் 1:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட வேண்டும். அதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும்.

ஸ்டேப் 2:

பின் அதனுடன் சர்க்கரைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்க வேண்டும். பின் அதனை நன்கு கலந்து விட வேண்டும்.

 home made sugar wax

ஸ்டேப் 3:

பிறகு அதனை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். சூடு செய்யும் போது நன்கு கலந்துவிட்டு கொண்டே இருக்கனும். இல்லையென்றால் அடிப்பிடித்துவிடும்.

 how to make sugar wax for hair removal at home

இதையும் படியுங்கள்=> முகத்தில் உள்ள தேவையில்லாத முடியை இப்படி நீக்குங்கள்..!

ஸ்டேப் 4:

 

கீரிம் பதம் வரும் வரை நன்கு கலந்து விட வேண்டும். கீரிம் பதம் வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். 5 முதல் 7 நிமிடங்கள் வரை சூடுபடுத்த வேண்டும். கீரிம் பதம் வந்துவிட்டதா என்பதை அறிய சிறுது கையில் எடுத்து பார்க்க வேண்டும். பசை போன்ற பதத்தில் இருந்தால் இறக்கிவிடலாம். சர்க்கரை Wax கீரிம் தயார்.

 home made sugar wax in tamil

ஸ்டேப் 5:

பின் அதனை 45 நிமிடங்களுக்கு எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட வேண்டும். 45 நிமிடங்களுக்கு பின் பார்க்கும்போது Wax இருகி பாகு போன்று மாறி இருக்கும்.

இந்த சர்க்கரை Wax கிரீமினை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற முடிகளை எளிதாக வீட்டிலேயே நீக்கிவிடலாம்.

Wax கீரிம் பயன்படுத்தும் முறை:

 home made hair removal remedies in tamil

நீங்கள் தேவையற்ற முடியை நீக்கும்  இடத்தில் wax கீரிமை ஸ்பூன் பயன்படுத்தி அப்ளை செய்ய வேண்டும். Wax கிரீமானது மிதமான சூடுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்ளை செய்யும்போது  முடி வளர்ந்த திசைக்கு எதிரான திசை நோக்கி Wax கீரிமை அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்த பின் Wax strip அல்லது காட்டன் துணியினை Wax அப்ளை செய்த இடத்தில் வைத்து நன்கு தடவி விட்டு வேகமாக துணியினை எடுக்கவும். முடியானது நீக்கப்படும். இதே போன்றே அனைத்து இடங்களிலும் செய்து தேவையற்ற முடியினை நீக்க வேண்டும்.

 wax preparation at home in tamil

இதையும் படியுங்கள்=>நிரந்தரமாக உடலில் முடி வளராமல் இருக்க இயற்கை வழிகள்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil