வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் உடல் முழுவதும் பளபளப்பாக மாற இந்த ஒரு பொடி மட்டும் போதும்..!

Updated On: October 10, 2023 1:01 PM
Follow Us:
Home Remedies for Glowing Skin in Tamil
---Advertisement---
Advertisement

Home Remedies for Glowing Skin in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள அதிகப்படியான சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவரின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதுமே பொலிவிழந்து காணப்படுகின்றது. அப்படி நீங்களும் உங்களின் உடல் முழுவதும் கருமையாக பொலிவிழந்து காணப்படுகின்றதே என்று கவலைப்படும் ஒரு நபர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்களின் உடல் முழுவதும்  பளபளப்பாக மாற உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Natural Beauty Tips for Glowing Skin in Tamil:

Natural Beauty Tips for Glowing Skin in Tamil

உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்களின் உடல் முழுவதும்  பளபளப்பாக மாற உதவும் சில குறிப்பை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. கடலைப்பருப்பு – 1 கைப்பிடி 
  2. பாசிப்பருப்பு – 1 கைப்பிடி 
  3. ஆவாரம் பூ – 2 கைப்பிடி 
  4. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. முல்தானி மெட்டி – 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பை எடுத்து கொள்ளவும்:

Home remedy for glowing skin in summer in tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கடலைப்பருப்பினை சுத்தம் செய்து விட்டு நன்கு காய வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சலித்து வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

பாசிப்பருப்பை எடுத்து கொள்ளவும்:

Home remedy for glowing skin in tamil

அதே போல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு பாசிப்பருப்பினை சுத்தம் செய்து விட்டு நன்கு காயவைத்து கொள்ளுங்கள். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து நாம் கடலைப்பருப்பு பொடியை சலித்து வைத்துள்ள பாத்திரத்திலேயே இதனையும் சலித்து வைத்து கொள்ளுங்கள்.

ஆவாரம் பூவை எடுத்து கொள்ளவும்:

Instant glowing skin tips in tamil

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு ஆவாரம் பூவினையும் சுத்தம் செய்து விட்டு நன்கு காய வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து சலித்து சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்குமாறு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> 1 மணி நேரத்தில் உங்களின் முகம் வெள்ளையாக மாற வேண்டுமா அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க போதும்

மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:

Beauty tips for glowing skin at home in tamil

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

முல்தானி மெட்டியை சேர்த்து கொள்ளவும்:

Beauty tips for glowing skin in tamil

இறுதியாக இதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நாம் தயாரித்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பசை போல் கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவி 10 – 20 நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பொலிவிழந்து காணப்படும் உங்களின் உடல் முழுவதும் நன்கு பளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

முகம் பளிச்சென்று இருக்க

முகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!