கை வச்சாலே சீப்போட முடி வருதா..! அப்போ இந்த 2 பொருளை கலந்து தடவுங்க போதும்..!

Advertisement

முடி உதிர்வு நீங்க

முடி உதிர்வு பிரச்சனை ஆனது இன்றைய காலத்தை பொறுத்தவரை பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவருக்கும் வருகிறது. அதிலும் சிலருக்கு தலையில் சீப்பு வைத்தால் போதும் முடி அப்படியே கையோடு வருகிறது என்ற பிரச்சனை தான் அதிகமாக உள்ளது. சரி எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று கடையில் விற்கும் எண்ணெய் மற்றும் ஹேர் பேக் என நிறையவற்றை உபயோகப்படுத்தி இருப்போம். அப்படி நாம் செயற்கையாக தயாரிக்கும் பொருளை முடிக்கு பயன்படுத்துவது என்பது நல்லதல்ல. அதனால் தான் இன்றைய பதிவில் கொய்யா இலையினை வைத்து ஹேர் பேக் தயார் செய்து அப்ளை செய்வதன் மூலம் முடி உதிர்வு, பொடுகு மற்றும் பேன் ஆகியவற்றில் இருந்து விடுபடுவது பற்றி தெறிந்துக்கொள்ள போகிறோம்.

Home Remedies For Hair Fall and Regrowth:

 கொய்யா இலையில் வைட்டமின் C, வைட்டமின் B6, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் ஆன்டி ஆக்ஸைடு போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. 

ஆகையால் இத்தனை சத்துக்கள் நிறைந்த கொய்யா இலையில் இருந்து ஹேர் பேக் தயாரித்து அப்ளை செய்வது பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • கொய்யா இலை- 10
  • கற்றாழ- சிறிய துண்டு
  • காட்டன் துணி- சிறிது  

இதையும் படியுங்கள்⇒ இது ஒன்று போதும் 15 நிமிடத்தில் உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்.. 

ஹேர் பேக் செய்வது எப்படி.?

முடி உதிர்வு நீங்க

ஸ்டேப்- 1

முதலில் எடுத்து வைத்துள்ள கொய்யா இலையினை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக 10 நிமிடம் ஊறவைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு ஒரு சிறிய துண்டு கற்றாழை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமாக தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். இப்போது அதில் இருந்து 3 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீரில் ஊறவைத்துள்ள கொய்யா இலையினை சேர்த்து அதனுடன் கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். வேண்டும் என்றால் சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து அரைக்கும் போதும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது அரைத்து வைத்துள்ள கொய்யா இலை பேஸ்ட்டினை ஒரு காட்டன் துணியில் வைத்து ஜூஸ் போல பிழிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் கொய்யா இலை ஹேர் பேக் தயார்.

இதையும் படியுங்கள்⇒ கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.. 

Hair Pack Apply:

Hair Pack Apply in tamil

உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் வேர் வரை படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பின்பு வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இவ்வாறு செய்தால் போதும் பொடுகு, முடி உதிர்வு மற்றும் சூடு குறைந்த முடி அதுவே நன்றாக வளர ஆரம்பிக்கும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement