Natural Hair Dye Homemade
இளைஞர்கள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நரை முடி பிரச்சனையை சந்திக்கின்றனர். நரை முடி பிரச்சனைக்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் நரை முடி பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஹேர் டை செய்முறை:
ஒரு இரும்பு கடாய் எடுத்து அதில் 2 தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து 1 நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் பார்த்தால் மருதாணி பேஸ்ட் கருப்பாக இருக்கும். நீங்கள் இரவு கலந்து வைக்கும் போது பச்சை நிறமாக இருக்கும். மறுநாள் காலையில் பார்த்தால் கருப்பு நிறமாக மாறியதற்கு காரணம் இரும்பு கடாய் தாங்க. இரும்பு கடாயில் உள்ள அயர்ன் சேர்ந்து வேலை செய்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ கேரளா பெண்கள் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும்..! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது..?
அப்ளை செய்யும் முறை:
இந்த டையை அப்ளை செய்வதற்கு முன்னால் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்க கூடாது. மருதாணி டையை தலையில் அப்ளை செய்து பின் 2 மணி நேரம் கழித்து தலை குளிக்கவும். தலை தேய்த்து குளிக்கும் போது எந்த விதமான ஷாம்போ அல்லது சீயக்காயோ சேர்த்து தலை தேய்க்க கூடாது.
தலை குளித்த பிறகு தலை மருதாணி கலருக்கு இருக்கும், இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் சிவப்பு நிறத்தில் காணப்படும். பயப்பட வேண்டாம். அதிலே இன்னொரு பேக் போட வேண்டும்.
ஒரு பவுலில் அவுரி பொடி உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இந்த அவுரி பொடி பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 3 மணி நேரம் தலையில் ஊற வைத்து விட்டு பிறகு தலையில் எந்த விதமான ஷாம்போ அல்லது சீயக்காயோ சேர்க்காமல் வெறும் தலையாக தண்ணீர் ஊற்றி அலச வேண்டும்.
தலை குளித்த பிறகு உடனே கருப்பாக இருக்காது. இயற்கையான முறையில் பயன்படுத்தினால் உடனே ரிசல்ட் வராது. அதற்காக கருப்பாக மாறாதா என்று கேட்க கூடாது. இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று ஒரு மாதத்திற்கு தொடர்ந்து அப்ளை செய்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ தலை சீவும் போது சீப்பில் முடி அதிகமாக கொட்டுதா..! அப்போ இந்த எண்ணெயை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |