Rice Face Pack in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்குமே முகத்தில் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. கரும்புள்ளிகள், பள்ளங்கள், முகம் பொலிவிழந்து போவது, சருமம் வறண்டு போவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு முக அழகே கெட்டு விடுகிறது. முக அழகை திரும்ப பெறுவதற்கு பல வகையான செயற்கை க்ரீம்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது மேலும் மேலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் இயற்கை பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி முகத்தை பளபளப்பாகவும் அழகாவும் வைத்திருக்கலாம். எனவே இப்பதிவில் முகத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மற்றும் அழகாவும் வைத்திருக்க ஒரு அருமையான இயற்கையான பேஸ் பேக் செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Rice Face Pack at Home in Tamil:
அரிசி பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி- 3 ஸ்பூன்
- பீட்ரூட் சாறு- 2 ஸ்பூன்
பேஸ் பேக் செய்யும் முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். பிறகு அரிசியை நன்றாக கழுவிட்டு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது அதில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரிசியை நன்றாக வேகவைத்து கொள்ளுங்கள். அதாவது 12 லிருந்து 15 நிமிடம் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு வேகவைத்த சாதத்தை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இதனுடன் பீட்ரூட் சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இப்போது பேஸ் பேக் தயார்.
கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..! |
அப்ளை செய்யும் முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். பிறகு தயார் செய்து வைத்துள்ள அரிசி பேஸ் பேக்கை எடுத்து முகத்தில் எல்லா பகுதிகளிலும் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை 10- லிருந்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரால் முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், பள்ளங்கள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும்.
இந்த பேஸ் பேக்கை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தியத்துமே உங்கள் முகம் பொலிவாக மாறுவதை பார்ப்பீர்கள்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி உங்களை இளமையாக காட்ட இந்த 2 பொருள் மட்டும் போதும்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |