வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளை முடி அதிகமாக இருக்கா.! அப்போ மாதம் இரண்டு முறை இந்த டையை தடவி வெள்ளை முடிக்கு குட் பாய் சொல்லுங்க

Updated On: August 6, 2024 12:22 PM
Follow Us:
How to Change White Hair to Black Hair Naturally in Tamil
---Advertisement---
Advertisement

How to Change White Hair to Black Hair Naturally in Tamil

இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களினால் நரை முடி ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் டை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்த பாடல் கேட்பது அல்லது வேறு ஏதவாது உங்களுக்கு பிடித்ததை செய்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வர வேண்டும். மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். நீங்கள் சரியாக தூங்கி எழுந்தாலே முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சனை இருக்காது. இதையெல்லாம் நான் சரியாய் செய்கிறேன் எனக்கு இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று சொல்லுங்க என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.

இயற்கை ஹேர் டை:

How to Change White Hair to Black Hair Naturally in Tamil

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் டீதூள் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து  அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் ஆம்லா பவுடர் 2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.

முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து வதக்கவும். ஆம்லா பவுடர் கருப்பு நிறம் வந்ததும், மருதாணி பவுடர் 4 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.

பின் அதில் டீகாஷனை சேர்த்து ஒன்றாக கலந்து விடவும். ஒரு 2 நிமிடம் வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு அப்படியே இரவு முழுவதும் கடாயிலே இருக்கட்டும்.

இவ்வளவு கருமையான முடியா..? அப்படினு சொல்ற அளவிற்கு நரை முடியை கருமையாக மாற்றும்..!

மறுநாள் காலையில் பார்த்தால் கெட்டியான பதத்தில் கருப்பாக வந்திருக்கும். அதில் அவுரி பொடி 4 தேக்கரண்டி, தண்ணீர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அவ்ளோ தாங்க ஹேர் டை ரெடி! இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பயன்படுத்தும் முறை:

செய்து வைத்துள்ள ஹேர் டையை தலை முடி முழுவதும் தடவி 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். முக்கியமாக ஷாம்பு ஏதும் அப்ளை செய்யாமல் டையை மட்டும் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டும். மறுநாள் வேண்டுமென்றால் ஷாம்பு அப்ளை செய்து குளிக்கலாம். இப்படி செய்வதினால் தலை ரொம்ப நாளைக்கு கருப்பாக இருக்கும். இந்த ஹேர் டையை மாதத்தில் இரண்டு முறை அப்ளை செய்தால் போதும்.

ஒல்லியாக வால் போல இருக்கின்ற முடியினை 2 செ.மீ வரை அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அழகு குறிப்பு

அழகு குறிப்பு – பூசணி வைத்து கூட அழகை அதிகரிக்கலாமா? beauty tips in tamil..!

Olive Oil Uses in Tamil

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..