பாதங்களில் இருக்கும் வெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

Tips For Cracked Feet in Tamil

Tips For Cracked Feet in Tamil

இன்றைய பதிவில் பாதங்களில் இருக்கும் வெடிப்பை சரி செய்வதற்கான சில டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆண்களை விட பெண்களுக்கே பாதவெடிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாக பாத வெடிப்பு வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் இன்று குழந்தைகளுக்கும் பாதவெடிப்பு வருகிறது. பாதவெடிப்பை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் மேலும் பாதத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பாதவெடிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

பாதவெடிப்பு மறைய டிப்ஸ் -1

பாதவெடிப்பு மறைய டிப்ஸ்

  1. தயிர் – 1 ஸ்பூன்
  2. வெந்தயம் – 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு – சிறிதளவு
  4. உப்பு – 1 ஸ்பூன்

முதலில் ஒரு டப் -ல் சூடான தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு, உப்பு 1 ஸ்பூன் சேர்த்து அதில் உங்கள் பாதங்களை 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். பின் பாதங்களை சொரசொரப்பான பிரஸ் -யை கொண்டு தேய்த்து நன்றாக கழுவி கொள்ளுங்கள்.

அடுத்து மிக்சி ஜாரில் தயிர் மற்றும் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இதை இரவு தூங்கும் முன் பாத வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி கொள்ளுங்கள். பின் காலையில் சூடான நீரில் பாதங்களை கழுவ வேண்டும்.

இதுபோல வாரம் 3 அல்லது தொடர்ந்து செய்து வந்தால் பாதவெடிப்பு மறைய தொடங்கும். மேலும், பாதங்கள் மென்மையாக இருக்கும்.

பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

பாதவெடிப்பு மறைய டிப்ஸ் -2 

பாதவெடிப்பு மறைய

  1. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  3. விக்ஸ் (Vicks)1/2 ஸ்பூன்

மேல் கூறியது போல உங்கள் பாதங்களை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 20 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும்.

20 நிமிடம் கழித்து உங்கள் பாதங்களை சொரசொரப்பான பிரஸ் -யை கொண்டு தேய்த்து கொள்ள வேண்டும். பின் சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் பாதங்களை துடைக்க வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் மற்றும் விக்ஸ் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக குழைத்து கொள்ளுங்கள்.

பின் இந்த பேஸ்டை இரவு தூங்கும் முன் உங்கள் பாதங்களில் தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் சூடான நீரை கொண்டு பாதங்களை கழிவு கொள்ளுங்கள்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் பாதத்தில் இருக்கும் வெடிப்பு மறையும். பாதம் மென்மையாக மாறும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil