இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..! How to Make Amla oil for Grey Hair in Tamil

Advertisement

இளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

How to make amla oil for grey hair-  வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்? நெல்லிக்காவிற்கு இயற்கையாகவே இளநரையை போக்கும் தன்மை உள்ளது. அதாவது நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட் தலைமுடிக்கு நல்ல போஷாக்கினை அளித்து, தலைமுடியை நன்கு நீளமாக வளர செய்கின்றது. குறிப்பாக இளம் வயதிலேயே சிலருக்கு நரைமுடி தோன்றும், அந்த  நரை முடி கருமையாக நெல்லிக்காய் ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது.

நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அதிகளவு சாப்பிடுவதினால் உடலில் ஆரோக்கியம் மேம்படும். சரி நரை முடி கருமையாக நெல்லைக்காய் எண்ணெய் தயார் செய்வது எப்படி (How to make amla oil for grey hair) என்பதை இங்கு தெரிந்துகொள்வோமா?

வெள்ளை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும்?

நெல்லிக்காய் எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – 250 கிராம்
  • காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம்

நெல்லிக்காய் எண்ணெய் செய்முறை:

நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு:

  • அடுப்பில் ஒரு இரும்பு எண்ணெய் கடாயினை வைத்து அவற்றில் சிறிதளவு தேங்காய் எண்ணெயினை ஊற்றவும்.
  • பின் 25 கிராம் காய்ந்த நெல்லிக்காயினை சேர்த்து நன்றாக கருகி வரும் அளவிற்கு வறுத்தெடுக்க வேண்டும்.

நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு:

  • நெல்லிக்காயை வறுக்கும் போது அவ்வப்போது சிறிதளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி வதக்குங்கள்.
  • நெல்லிக்காய் நன்கு வறுபட்டதும் அடுப்பில் இருந்து இறக்கி நெல்லிக்காயை நன்கு ஆறவிடவேண்டும்.

நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு:

  • பின் நெல்லிக்காய் நன்கு ஆறியதும் 250 கிராம் தேங்காய் எண்ணெயை அவற்றில் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • இவ்வாறு ஊறவைப்பதினால் நெல்லிக்காயில் உள்ள எசன்ஸ் அதாவது சத்துக்கள் அனைத்து தேங்காய் எண்ணெயில் சேர்க்கப்படுகிறது.

நரைமுடி கருமையாக எண்ணெய் தயாரிப்பு:

நெல்லிக்காய் 4 மணி நேரம் நன்கு ஊறியதும் நெல்லிக்காய் எண்ணெயை வடிகட்டி காற்றுப்புகாத ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வாரத்தில் 3 முறை அல்லது தினமும் தலை முடிக்கு பயன்படுத்துங்கள்.

நெல்லிக்காய் எண்ணெய் பயன்கள்:

இந்த நெல்லிக்காய் எண்ணெய் தலை முடியை அடர்த்தியாக வளர செய்யும், நரைமுடி மற்றும் செம்பட்டை முடியினை கருமையாக மாற்றும் தன்மை கொண்டது.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement