How to Make Your Skin Glow Naturally at Home
அழகை மேம்படுத்துவதில் அனைவருமே அக்கறை செலுத்துகின்றனர். முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று அழகு படுத்துவீர்கள். ஆனால் அவை நிரந்தரமான அழகை கொடுக்காது. நிரந்தரமாக முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டும் என்றால் இயற்கையான முறையை பயன்படுத்த வேண்டும். அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை எப்படி பளபளப்பாக மாற்றுவது என தெரிந்து கொள்வோம் வாங்க..
How to Make Your Skin Glow Naturally at Home:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. புற ஊதா கதிர்களிலுருந்து எதிராக சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. ஆனால் வறண்ட மற்றும் மந்தமான சருமம் உள்ளவர்கள் மட்டும் இதனை பயன்படுத்தவும்.தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி முகத்தில் அப்ளை செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவ வேண்டும்.
பளபளப்பான சருமத்திற்கு தேங்காய் எண்ணெயில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவ வேண்டும். இந்த குறிப்பை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு தோலுடன் இதை மட்டும் கலந்து போடுங்கள்..! முகம் எப்போதும் பளிச்சென்று ஜொலிக்கும்..!
கற்றாழை:
கற்றாழையில் உள்ள குளிர்ச்சி முகத்தை எரிச்சல் இல்லாமலும், பருக்கள் இல்லாமலும், சுருக்கம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
கற்றாழையின் தோல்களை சீவி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
பால்:
பால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது. வீட்டிலேயே பளபளப்பான முகத்தை பெறுவதற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஒரு கிண்ணத்தில் பச்சை பால் 2 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி தேன், உளுத்தம் மாவு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
இளமையான தோற்றத்திற்கு பப்பாளி:
பப்பாளியில் பாப்பேன் என்று நொதி இருப்பதால் இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
பப்பாளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
முக்கியமாக ஒரு நாளைக்கு தண்ணீர் 1 லிட்டர் குடிக்க வேண்டும். ஏனென்றால் தண்ணீர் நிறைய குடிக்கும் போது தான் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும், 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும்.இந்த மூன்று எண்ணெய்களில் ஏதவாது ஒரு எண்ணெயை பயன்படுத்தினாலே நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளரும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |