முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Hair Growth Oil Tips in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையில் எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறீர்கள். ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு பலனளிக்காமல் போகிறதா..?

ஆகவே முன் நெற்றியில் முடி ஏறி கொண்டே செல்கிறதா..? அப்போ இந்த எண்ணெயை தலைக்கு தடவி பாருங்கள். நீங்கள் இழந்த முடியை திரும்ப பெற முடியும். அந்த வகையில் இந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

How To Prepare Hair Growth Oil in Tamil:

தேவையான பொருட்கள்: 

  1. சின்ன வெங்காயம் – 1/2 கிலோ
  2. வேப்பிலை – 1 கப்
  3. கருவேப்பிலை – 1 கப்
  4. மருதாணி – 1 கைப்பிடி அளவு
  5. நெல்லிக்காய் – 1/2 கிலோ
  6. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
கேரளா பெண்களின் தலை முடி ரகசியம் இது தான்..! வெறும் 15 நாட்களில் முடி அடர்தியாகும் இதை ட்ரை பண்ணுங்க..!

How To Prepare Hair Oil in Tamil:

Hair Growth Oil Tips in Tamil

ஸ்டேப் – 1 

முதலில் வேப்பிலை, கருவேப்பிலை மற்றும் மருதாணி இவை மூன்றையும் நன்றாக கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட வேண்டும்.

ஸ்டேப் – 2

பின் அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காயை போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் – 3 

பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையில் இருந்து சாறை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் – 4

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் – 5 

பின் எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள சாறை ஊற்ற வேண்டும். அடுத்து அடுப்பை குறைத்து வைத்து 20 லிருந்து 30 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப் – 6

பின் எண்ணெய் நன்றாக கொதித்தவுடன் இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெய்யை நீங்கள் தினமும் தலைக்கு தடவி வரலாம். இதனால் கொட்டிய இடத்தில் முடி வேகமாக வளரும். அதுபோல முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும்.

முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement