கண் கருவளையம் மறைய
இன்றைய காலம் மட்டும் இல்லாமல் முந்தைய காலம் முதல் கருவளையம் பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த நவீன காலத்தில் ஆண், பெண் இருவரில் யாராக இருந்தாலும் சரி அதிகமாக கருவளையம் பிரச்சனை இருக்கிறது. ஏனென்றால் அதிக நேரம் மொபைல் உபயோகிப்பது, கணினி உபயோகப்படுத்துவது மற்றும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் தூங்காமல் கண் விழித்து இருப்பது இது போன்ற செயல்களினால் கண்களில் கருவளையம் வருகிறது. அதனால் நீங்கள் இந்த கருவளையத்தை நினைத்து கவலை பட வேண்டாம். ஒரே ஒரு நாள் இரவில் கண்களில் இருக்கும் கருவளையத்தை மறைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க:
கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முதலில் ஒரு Face Pack தயார் செய்ய வேண்டும். அதனை எப்படி தயார் செய்வது மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு- 1
- பாதாம் பவுடர்- 2 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல்- சிறிய துண்டு
இதையும் படியுங்கள்⇒ முடி கொட்டுவதை நிறுத்தி முடி 3 மடங்கு நீளமாக வளர இது மட்டும் போதும்..!
How to Remove Dark Circles at Home Naturally:
ஸ்டேப்- 1
முதலில் 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதன் மேலே இருக்கும் தோலினை நன்றாக அகற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த உருளைக்கிழங்கை மிகவும் நைசாக நறுக்கி வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
நீங்கள் எடுத்துவைத்துள்ள கற்றாழையை தண்ணீரில் சுத்தமாக அலசிய பிறகு அதிலிருந்து 2 தேக்கரண்டி அளவிற்கு ஜெல் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது நைசாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் 2 தேக்கரண்டி அளவிற்கு சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்து கிண்ணத்தில் இருக்கும் உருளைக்கிழங்கு சாறுடன் 2 தேக்கரண்டி பாதாம் பவுடர் சேர்த்து சிறிது நேரம் கலந்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
சிறிது நேரம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள பொருட்களுடன் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 6
5 நிமிடம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை இரவு தூங்குவதற்கு முன்பு கண்ணில் கருவளையம் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து விட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவி விடுங்கள்.
இது மாதிரி செய்தால் போதும் முதல் நாளிலையே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுபோல 1 வாரம் தொடர்ந்து இந்த Face பேக்கை போட்டு வந்தால் போதும் முழுமையாக கருவளையம் மறைந்து விடும்.
இதையும் படியுங்கள் ⇒ முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |