உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொதுவான பியூட்டி டிப்ஸ் இது தாங்க..!

how to stop hair growth on face naturally

முகம் பொலிவு பெற அழகு குறிப்பு..! Quick Face Whitening Tips in Tamil..!

How to Stop Hair Growth on Face Naturally:- இன்றைய மாடர்ன் உலகில் அனைவருமே சரும அழகை அதிகரிக்க பலவகையான பியூட்டி டிப்ஸினை பாலோ செய்கின்றன. இருப்பினும் அதனை இயற்கை முறையில் செய்யும் பொழுது  சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. பெரும்பாலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற பிரச்சனை என்று பார்த்தால் அது சரும வறட்சி, கண்களுக்கு கீழ் கருவளையம், உதடுகளில் வெடிப்பு, பொலிவற்ற சருமம், முகத்தில் தேவையில்லாத இடங்களில் முடி வளர்வது, இந்த பிரச்சனைகளை தான் அதிகமாக சந்திப்போம். இத்தகைய பிரச்சனையை நாம் வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக சரி செய்துவிட முடியும். தங்களுடைய சரும பராமரிப்புக்கு சில அழகு குறிப்பு டிப்ஸினை பதிவு செய்துள்ளோம், அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..!

How to Stop Hair Growth on Face Naturally

டிப்ஸ்: 1

சில பெண்களுக்கு முகத்தில் மீசை தாடி வளரும். இதனை பார்ப்பவர்கள் கேலியும், கிண்டலும் செய்வதுண்டு. இதனால் அவர்களுக்கு மன உளைச்சலும் ஏற்படும் இந்த பிரச்சனையை சரி இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/2 ஸ்பூன் கடலை மாவு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் தேன் 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை மீசை வளர்ந்துள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் நன்றாக காய்ந்தவுடன் தங்கள் கை விரல்களை பயன்படுத்தி லேசாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து கொட்டிவிடும்.

டிப்ஸ்: 2

பொதுவாக உடல் அதிக வெப்பமாக இருந்தால் உதடுகள் காய்ந்து, வெடிப்புடன் காணப்படும். இதற்கு உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதை போக்க இந்த டிப்ஸையும் பாலோ பண்ணுங்கள்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் அரைத்துண்டு வாழைப்பழம் மற்றும் ஒரு விட்டமின் ஈ மாத்திரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். பின் உங்கள் உதடுகளில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து உதடுகளை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும்.

டிப்ஸ்: 3

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதாவது வாழைப்பழம் தோலினை எடுத்து கொள்ளுங்கள். அதன் உள்பகுதியை முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருமைகள் மறைவதுடன் சருமத்தில் உள்ள அழுக்குகள், சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள், இறந்த செல்கள், முகத்தில் உள்ள மாசுக்கள் அனைத்து அகன்று சருமம் பொலிவாக காணப்படும்.

டிப்ஸ்: 4

பெண்களுக்கு பொதுவாக முகத்தில் அதிகளவு பருக்கள் இருக்கும் இந்த பிரச்சனைக்கு டீ ட்ரி ஆயில் (Tea tree oil) சிறந்த பொருளாக விளங்குகிறது. எனவே முகத்தில் எங்கெல்லாம் பருக்கள் இருக்கின்றதோ அங்கு இரவு உறங்குவதற்கு முன் சிறிதளவு டீட்ரி ஆயிலை வைக்கவேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் மறைய ஆரம்பிக்கும். முகமும் பொலிவுடன் காணப்படும்.

டிப்ஸ்: 5

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சிறிதளவு ஐஸ் கட்டிகளை நிரப்பி கொள்ளுங்கள். பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி முகத்தை அந்த நீரில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு 5 நிமிடங்கள் செய்யலாம். இந்த டிப்ஸினை வாரத்தில் ஒரு முறை காலையில் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாரத்தில் ஒரு நாள் இந்த டிப்ஸை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற இடங்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் அகன்று சருமம் மென்மையாக காணப்படும்.

மேலும் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், கருவளையங்கள், சரும வறட்சி மற்றும் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் என அனைத்தும் நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil