Aloe Vera Gel For Hair Growth
முடி வேகமாக வளரும் என்று யாராவது கூறினால் போதும் நாம் உடனே அதை வாங்கி அப்ளை செய்து விட்டு தான் அடுத்த வேலையினை பாப்போம். இந்த பழக்கமானது ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் இருக்கிறது. ஆனால் நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டும் வைத்து முடியினை நீங்கள் எதிர்பார்த்த மாதிரி வேகமாக வளர்செய்யலாம். இதனை யாரும் பெரிதாக கருதாமல் கடையில் விற்பதை தான் வாங்கி உபயோகப்படுத்துகின்றோம். ஆகையால் வீட்டில் இருக்கும் வெறும் கற்றாழையை மட்டும் வைத்து இயற்கையான முறையில் முடி உதிர்வை குறைத்து முடியை எப்படி வேகமாக வளர்செய்வது என்று இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முடி வளர கற்றாழை:
கற்றாழையில் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல விதமான சத்துக்கள் உள்ளது. இத்தனை சத்துக்கள் உள்ள கற்றாழை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைந்து வேகமாக முடி வளரும்.தேவையான பொருட்கள்:
- கற்றாழை- சிறிய துண்டு
- வெங்காயம்- 2
இதையும் படியுங்கள்⇒ வெயிலில் பட்டாலும் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க இதை செஞ்சு பார்த்தீங்களா..!
ஹேர் பேக் செய்வது எப்படி..?
கற்றாழை ஜெல் தயாரித்தல்:
முதலில் எடுத்துவைத்துள்ள கற்றாழையை சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். அதன் பிறகு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லினை எடுத்துக்கொண்டு ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.
வெங்காயம் பேஸ்ட் தயாரித்தல்:
இப்போது வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதன் மேல் இருக்கும் தோலினை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அந்த வெங்காயத்தை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
ஹேர் பேக் தயார்:
அடுத்து கற்றாழை ஜெல் எடுத்துவைத்துள்ள பவுலில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் பேஸ்ட்டை நன்றாக கலந்து அப்படியே 10 நிமிடம் விட்டு விடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ Fuction -னுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பேஸ் பேக் போட்டுட்டு போங்க..! செம பிரைட்டா தெரிவிங்க..!
ஹேர் பேக் அப்ளை செய்தல்:
தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை உங்களுடைய தலையில் நன்றாக நுனி முதல் அப்ளை செய்து கொஞ்சம் நேரம் மசாஜ் செய்து விட்டு விட வேண்டும்.
அதன் பிறகு 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் முடி உதிர்வு குறைந்து மிக வேகமாக முடியினை வளர செய்யும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |