கருவளையம் மறைய ஈசியான வழிகள்..!

Advertisement

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் இந்த பிரச்சனையானது அதிகளவு பெண்களை பாதித்து வருகிறது. முன்பு அனைவருக்கும். இந்த பிரச்சனை வராது ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை இந்த பாதிப்பு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகிறது. அதனை யாரும் பொருட்படுத்தவில்லை..! இருந்தாலும் முகத்தில் இருப்பது உங்களுடைய அழகை கெடுத்துவிடுகிறது. ஆகையால் சில பெண்கள் அதற்கு பலவகையான கிரீம்களை வாங்கி தடவி வந்தாலும் அது நமக்கு இப்போது வேண்டுமானாலும் அழகு கொடுக்கலாம் ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு பக்கவிளைவுகளை தருகிறது. ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான டிப்ஸ் தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவேண்டும்.

கருவளையம் வர காரணம்:

இந்த கருவளையம் பிரச்சனையானது ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது போன் மற்றும் கணினி, என இரண்டும் தான் அதிகளவு பாதிக்க காரணமாக உள்ளது. காரணம் கணினி, போன் முன் அதனை பார்ப்பதால் அவர்களுக்கு பிரச்சனை வருகிறது. கணினி என்றால் அதிகளவு பயன்படுத்துவது பெண்கள் தான் அதனால் அவர்களுக்கு அதிகம் இந்த பிரச்சனை வருகிறது. அதேபோல் சிறிது நேரம் தூங்குவது, கண்களுக்கு கொடுக்கப்படும் வேலை, உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த கருவளையம் வரும். அதனால் அதனை மறைக்க பெண்கள் கிரீம்களை தான் பயன்படுத்தி மறைந்துவிடுவார்கள். இதனை செய்து முகத்தை பின்பு பாதிக்கப்படுவதற்கு இப்போதே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் தடத்திடுங்கள்.

டிப்ஸ் -1

முதலில் இரவில் நன்கு தூங்குவது நல்லது. தூங்கும் போது கண்களில் இறுக்கமாக மூடி தூங்காமல் லேசாக மூடிக்கொண்டு தூங்குவது நல்லது.

டிப்ஸ் -2

அதேபோல் கண்களுக்கு அதிகம் வேலைகொடுக்க கூடாது. ஏதேனும் புத்தகம் படித்தால் அதனை உற்று கவனித்து படித்தால் அது கண்களுக்கு சோர்வை கொடுக்கும். ஆகையால் முடிந்தளவு கண்களை அதிகம் வேலைகொடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடலுக்கு தேவையான முக்கியமான பொருட்களில் தண்ணீர் முக்கியமானது அதனை சரியாக உடலுக்கு சேர்ப்பது நல்லது.

கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்:

புதினா சாறு

புதினா இலையை மசித்து அதில் வரும் சாறை கண்களுக்கு கீழ் தடவி 10 அல்லது 15 நிமிடம் காயவைத்து கழுவி வருவதால் முகத்தில் இருக்கும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய் பயன்கள்

 

வெள்ளரிக்காயை சிறிய துண்டாக வட்ட வடிவில் நறுக்கி அதனை கண்களுக்கு மேல் வைத்து வர உடல் குளிர்ச்சி அடைந்து கண்களில் இருக்கும் கருவளையம் நீங்கும்.

உருளைக்கிழங்கள் எடுத்து அதனை கண்களுக்கு கீழ் தடவி வர கண்களில் ஏற்பட்டிருந்த கருப்பு குறையும்.

தக்காளி எலுமிச்சை

தக்காளி சாறை 2 ஸ்பூன் எடுத்து அந்த சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கரைத்து முகத்தில் கண்களுக்கு கீழ் தடவி வர கருவளையம் மறையும்.

மேலும் முகத்திற்கு அழகு சேர்க்க ⇒ ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ் 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement