கேரளா பெண்களின் தலை முடி ரகசியம் இது தான்..! வெறும் 15 நாட்களில் முடி அடர்தியாகும் இதை ட்ரை பண்ணுங்க..!

Kerala Hair Growth Tips in Tamil

How to Grow Hair in 15 Days Naturally in Tamil

பெண்களுக்கு முக அழகை விட கூந்தல் அழகு என்பது தனி தான். பெண்கள் சிலர் முக அழகை விட தலை முடிக்கு முக்கியதுவம் கொடுப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் முடி தனி அழகு தான் ஆனால் கேரளா பெண்கள் என்றாலே அழகு தான் அதிலும் அவர்களின் தலைமுடிக்கு தனி மகிழ்மை உள்ளது. அதனை பார்க்கும்போதே அழகாக இருக்கும். அவர்களின் முடி போல் நமக்கும் வளர இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க அவ்ளோதான் உங்களின் முடியும் அவர்களை போல் வளரும்.

Kerala Hair Growth Tips in Tamil:

தேவையான பொருட்கள்: 

  1. வெந்தயம் –  2 டேபிள் ஸ்பூன்
  2. செம்பருத்தி இலைகள் – 10 
  3. பெரிய நெல்லிக்காய்- 1
  4. கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
  5. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 1 

 fast hair growth tips in tamil

முதலில் மிக்சி ஜாரில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும். அதன் கூடவே 10 செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ளவும். இலையை முதலில் கழுவிக்கொண்டு அதன் பின் அதனை துடைத்து விட்டு சிறியதாக நறுக்கி மிக்சியில் போடவும்.

ஸ்டேப்: 2

அதேபோல் ஓரு பெரிய நெல்லிக்காயை எடுத்து சிறிய துண்டாக நறுக்கி அதையும் அந்த மிக்சி ஜாரில் சேர்க்கவும். கடைசியாக 2 கைப்பிடி அளவு கருவேப்பிலை இலையையும் அதனுடன் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைத்துகொள்ளவும்.

ஸ்டேப்: 3

1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் அதனை ஒரு கடாயில் ஊற்றி மீடியம் தீயில் இருக்கட்டும் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடுபடுத்தவும்.

ஸ்டேப்: 4 

அதன் பின் அரைத்துவைத்த பொருட்களை வெது வெதுபான எண்ணெய்யில் சேர்க்கவும். அடுப்பு மிதமான தீயில்  இருக்க வேண்டும் அடிக்கடி ஒரு கரண்டியை வைத்து அதனை கலந்து விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அது கொதித்து முடிக்க எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.

முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..!

ஸ்டேப்: 5

இப்போது எண்ணெயின் நிறம் மாறிய பின் அதனை இறக்கி ஆறவிடவும். ஆரிய பின் அதனை எடுத்து வடிகட்டி.

தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக இதனை தேய்த்து வந்தால் கேரளா பெண்களின் தலை முடி போல் கரு கருவென்று நீளமாக வளரும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil