Long Hair Growth Hair Pack At Home in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு பிரச்சனை தான். ஆனால் ஆண்கள் அதில் அந்தளவிற்கு ஆர்வம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அழகை பராமரிப்பதற்காகவே நேரத்தை செலவிடுவார்கள். அப்படி இருப்பவர்கள் முடி உதிர்ந்தால் சும்மா இருப்பார்களா..? கட்டாயம் ஏதாவது எண்ணெயையோ அல்லது ஷாம்பையோ வாங்கி பயன்படுத்துவார்கள்.
அதனால் நாளடைவில் முடிக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து பாருங்க. நீங்களே போதும்னு சொன்னாலும் உங்கள் முடி வளர்ந்துக்கிட்டே போகும்..! சரி வாங்க நண்பர்களே பதிவுனுள் செல்வோம்.
Long Hair Growth Hair Pack At Home in Tamil:
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- வெந்தயம் – 3 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- தயிர் – 4 ஸ்பூன்
வேப்பிலை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு வேப்பிலை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
அடுத்து உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். அதாவது நீங்கள் காலையில் ஹேர் பேக் அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் முதல் நாளே வெந்தயத்தை ஊறவைக்க வேண்டும்.
உதிர்ந்த முடி அனைத்தும் பல மடங்கு திரும்ப வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும் |
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நம் எடுத்து வைத்துள்ள வேப்பிலை மற்றும் வெந்தயத்தை போட்டு கொள்ள வேண்டும். தண்ணீருக்கு பதிலாக வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் தேவையான அளவு தயிர் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை பழச்சாறை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
ஆலமரத்தின் விழுதுகளே தோற்றுப்போகும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும் |
அவ்வளவு தான் ஹேர் பேக் தயாராகிவிட்டது. இந்த ஹேர் பேக்கை உங்கள் முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை அப்ளை செய்ய வேண்டும். இந்த ஹேர் பேக் உங்கள் தலையில் 20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளலாம்.
இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |