புதிய முடி வளர்வதற்கு இந்த 3 பொருள் போதும்..!

Advertisement

New Baby Hair Growth in Tamil

தலை முடி பிரச்சனை என்பது அனைவர்க்கும் இருக்கும் பிரச்சனை தான். தலை முடி பிரச்சனை இல்லை என்று சொல்வது மிகவும் குறைவு தான். அதிகளவு பெண்கள் முதல் ஆண்கள் என இருவருக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்றால் தலை முடி கொட்டும் இடத்தில் புதிய முடி வளர்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதற்கு நிறைய இரசாயனம்  கலந்த செயற்கை பொருட்களை வாங்கி அப்ளை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் அதனை தடவிய உடன் நல்ல ரிசல்ட் கிடைக்குமா என்று கேட்டால் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதனாலேயே தலை முடி கொட்டும். ஆகவே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு இன்று சூப்பரான ஹேர் பேக் தயார் செய்வதை பற்றி பார்ப்போம் வாங்க..!

முடி கருப்பாக அடர்த்தியாக வளர:

  1. Lavender Oil – 3 டேபிள் ஸ்பூன்
  2. முட்டை – 2
  3. கற்றாழை – 3 டேபிள் ஸ்பூன்

ஸ்டேப்: 1

New Baby Hair Growth in Tamil

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் எப்பொழுதும் போல் முட்டையை உடைத்து ஊற்றக்கூடாது. நாம் எப்போதும் முட்டை ஊற்றினோம் என்றால் அதில் உள்ள வெள்ளைக்கருவை மட்டுமே சேர்ப்போம் ஆனால் இந்த ஹேர் பேக்கு வெள்ளைக்கரு மஞ்சள் கரு இரண்டையும் சேர்த்துக்கொள்ளுவோம்.  சேர்த்த உடன் இரண்டையும் கலந்துகொள்ளவும்.

1 மாதம் தொடர்ந்து செய்தால் தரையை தொடும் அளவிற்கு முடி வளர்ச்சி அதிகரிக்கும்..!

ஸ்டேப்: 2

New Baby Hair Growth in Tamil

முட்டை மட்டும் கலந்தோம் என்றால் அது ரொம்ப நாற்றம் வீசும் ஆனால் இதில் நாம் இன்னொரு பொருள் சேர்க்கப்போகிறோம் அது அந்த வாடை வரவிடாமல் வைக்கும். அது தான் லாவண்டர் எண்ணெய் இந்த எண்ணெயை 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்கிறோம். இப்போது இரண்டையும் கலந்து கொள்வோம்.

ஸ்டேப்: 3

New Baby Hair Growth in Tamil

அடுத்து அதில் கற்றாழை ஜெல் சேர்த்து மூன்று பொருளையும் நன்கு கலந்துவிடவும். இப்போது தலைமுடிக்கு சூப்பரான ஹேர் பேக் ரெடி.

பயன்படுத்தும் முறை: 

முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கும் முன்பு தலை முடியின் வேர் வரை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அதன் பின் முடியின் வேரில் அப்ளை செய்யவும். அதன் பின்  20 நிமிடம் அப்படியே ஊறவிட்டு தலைக்கு தேய்த்து குளிக்கவும். இது போல் தேய்த்து வர முடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளர வைக்கும்.

பார்லருக்கு செல்லாமல் ஹேர் Shining செய்வதற்கு ஒரு முறை இதை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement