என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!

Advertisement

என்றும் இளமையாக இருக்க வழிகள்

ஹாய் நண்பர்களே..! ஆண்கள், பெண்கள் இருவரில் யாராக இருந்தாலும் முகம் எப்போதும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் அப்படியே இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை இருக்கும். இளம் வயதில் நாம் எப்படி இருக்கிறமோ அப்படியே வயது அதிகரித்தாலும் கூட இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய செய்முறைகள் செய்து வருகின்றனர். அதற்காக நிறைய வகையான கிரீம்கள் வாங்கி அதை பயன்படுத்தி வருகின்றனர். எவ்வளவு தான் நீங்கள் கிரீம் பயன்படுத்தினாலும் ஒரு கால கட்டத்திற்கு மேல் அது உங்களுக்கு அலுத்து போகிருக்கும். அதனால் வீட்டில் இருந்த படியே என்றென்றும் இளமை குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்றைய அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பொலிவு இழந்த முகத்தை பளிச்சென்று வைப்பதற்கு 5 நிமிடம் போதும்…!

முகம் இளமையாக இருக்க:

உங்களுடைய முகம் என்றும் அழகாக இளமை தோற்றத்துடன் இருப்பதற்கு முதலில் நீங்கள் ஒரு Face பேக்கை தயார் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • பாதாம்- 10 கிராம் 
  • சந்தானம் – 50 கிராம் 
  • கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன் 
  • ரோஸ் வாட்டர்- 1/2 கப் 
  • வைட்டமின் E மாத்திரை- 1

ஸ்டேப்- 1

முதலில் உங்களுக்கு 10 கிராம் பாதாமை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு பாதாம் மேல் உள்ள தோல்களை நீக்கிவிட்டு தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது தோல் நீக்கிய பாதாமை ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்த பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

நீங்கள் அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்டில் இருந்து தனியாக சாறு பிழிந்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள். இப்போது இந்த பேஸ்ட்டுடன் வைட்டமின் E மாத்திரைகளை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு கலந்து வைத்துள்ள பேஸ்ட்டுடன் கடைசியாக கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனம் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் அதனை நன்றாக கலந்து கெட்டியான பதம் கிடைத்த பிறகு ஒரு 15 நிமிடம் அப்படியே பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

இப்போது நீங்கள் தயார் செய்த Face பேக்கை முகத்தில் 15 நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

இது மாதிரி 15 நாட்கள் இரவு உறங்குவதற்கு முன்பு செய்தால் உங்களுடைய முகம் சிறிதும் அழகு குறையாமல் என்று இளமையாக பொலிவுடன் இருக்கும். இனி நீங்கள் வீட்டில் இருந்த படியே முகத்தை பராமரிக்கலாம்.

காசு கொடுத்து பேஷியல் செய்வதை விட இந்த பேஷியல் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement