5 நிமிடத்தில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க

mugam palapalakka face pack in tamil

முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்

ஹாய் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் 5 நிமிடத்தில் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களின் முகத்தை பளபளக்க வைப்பதற்கு என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள போகிறோம். நீங்கள் பார்லருக்கு சென்று செலவு செய்ய வேண்டியதில்லை. வீட்டில் இருந்த படியே உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் முகத்தை அழகில் பளபளக்க வைக்கலாம். வாங்க நண்பர்களே இன்றைய பதிவை தொடர்ந்து படித்து உங்களுடைய முகத்தை அழகில் பளிச்சென்று வைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்கள்…!

Mugam Palapalakka Face Pack in Tamil:

உங்களுடைய முகம் பளபளப்பதற்கு முதலில் நீங்கள் ஒரு Face Pack தயார் செய்ய வேண்டும். Face Pack தயார் செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Face Pack தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட்- 2
  • கடலை மாவு- 1 ஸ்பூன் 
  • பால்- 3 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை தோல் சீவிக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பீட்ரூட்டை துருவி தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக துருவி வைத்துள்ள பீட்ரூட்டை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதிலிருந்து சாறு பிழிந்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது எடுத்துவைத்துள்ள பீட்ரூட் சாறில் 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு ஒரு 5 நிமிடம் அப்படியே அதை வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் களித்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி காய்ச்சி விடுங்கள். பால் நன்றாக காய்ந்த பிறகு நீங்கள் தயார் செய்த பீட்ரூட் சாறை அதில் ஊற்றி கிண்டி கொண்டே இருங்கள்.

ஸ்டேப்- 5

பால் மற்றும் மற்ற பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பேஸ்ட் போல் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய முகத்திற்கு Face Pack தயாராகிவிட்டது . சிறிது நேரம் அதனை ஆற வைய்யுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது Face Pack நன்றாக ஆறியவுடன் அதை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள். உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்த Face Pack-கை முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 7

ஒரு 15 நிமிடம் களித்து உங்களுடைய முகத்தை எப்போதும் போல கழுவி விடுங்கள். அதன் பின்பு பார்த்தால் நீங்களே உங்களுடைய முகத்தை பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு பளிச்சென்று அழகாக இருக்கும். வாரத்திற்கு 3 முறை இது மாதிரி செய்ய வேண்டும். (குறிப்பு: பால் முகத்திற்கு அப்ளை செய்தால் அலர்ஜியாகும் என்பவர்கள் இதனை தவிர்க்கவும்)

இதையும் படியுங்கள்⇒ அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரியபடும் அளவிற்கு முடி வளரும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil