முல்தானி மெட்டி
ஹாய் நண்பர்களே..! அனைவரும் சருமத்திற்கு அதிகமாக உபயோகப்படுத்த கூடிய ஒன்று தான் முல்தானி மெட்டி. முகம் அழகிற்காக பெருபாலோனோர் முல்தானி மெட்டியை பயன்படுத்துகின்றன. இது பாகிஸ்தானில் உள்ள முல்தான் என்ற இடத்தில் கிடைக்கிறது. அதனால் இதற்கு முல்தானி மெட்டி என்று பெயரிப்படுகிறது. பாகிஸ்தானில் முல்தானி மெட்டி கிடைத்தாலும் அதனை இந்தியர்கள் தான் அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர். இத்தகைய முல்தானி மெட்டியில் உள்ள நன்மைகளை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள வாங்க..!
Multani Mitti Benefits inTamil:
முல்தானி மெட்டியை முகத்தில் அப்ளை செய்யும் போது முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி முகம் அழகாக இருப்பதற்கு உதவுகிறது.
முல்தானி மெட்டியில் ஃபுல்லரின் எர்த் தோல் என்ற தன்மை இருப்பதால் இதை முகத்திற்கு எந்த விதமான பிரச்சனை வராமல் தடுக்க பயன்படுகிறது.
எண்ணெய் சருமம் மற்றும் முகத்தில் சிறு சிறு துளைகள் உள்ளவர்கள் முல்தானி மெட்டியை பயன்படுத்தினால் இது விரைவில் நல்ல பலனை தருகிறது.
இத்தகைய முல்தானி மெட்டியை முகத்திற்கு அப்ளை செய்யும் போது உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உங்களுடைய முகத்தை பளபளப்பாக வைக்க செய்கிறது.
மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் பெண்டோனைட் என்ற தாதுக்கள் முல்தானி மெட்டியில் இருப்பதால் இது முகத்தில் நீண்ட நாளாக இருக்கும் பரு பிரச்சனைக்கும் மற்றும் மீண்டும் பரு வராமல் இருக்கவும் பயன்படுகிறது.
இரவு நீங்கள் முல்தானி மெட்டியை முகத்தில் அப்ளை செய்து விட்டு மறுநாள் காலையில் வெளியில் சென்றால் அப்போது சூரிய வெளிச்சம் உங்கள் முகத்தில் பட்டாலும் அதனை எதிர்க்கும் பண்பு முல்தானி மெட்டியில் இருப்பதால் முகத்திற்கு எந்த வித சரும பிரச்சனையும் வராமல் தடுக்கிறது.
இது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும் |
Multani Mitti Hair Benefits in Tamil:
தலையில் முல்தானி மெட்டியை அப்ளை செய்யும் போது அது தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகை நீக்கி முடியை நன்கு நீளமாகவும் அடர்தியாகவும் வளர செய்கிறது.
அதே போல முல்தானி மெட்டி தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி கொட்டாமலும் மற்றும் முடிய நீளமாக வளரவும் நல்ல பலனை தருகிறது.
தலைக்கு நீங்கள் முல்தானி மெட்டியை அப்ளை செய்தால் அது தலைமுடிக்கு எந்த வித பிரச்சனையும் வராமல் தடுத்து முடியை நன்றாக வளர எண்ணெயை உறிஞ்சும் பண்பினை கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்⇒ ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000 |