நரை முடி கருப்பாக வேண்டுமா | Narai Mudi Karupaga
யாருக்கு தான் இந்த பிரச்சனை இல்லை அனைவருக்கும் உள்ளது. அப்படி என்ன பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா..? இந்த நரை முடி பிரச்சனை தான். இந்த நரை முடி பிரச்சனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. ஏன் அப்படி வருகிறது என்றால் உடலில் அனைத்து பாகங்களுக்கு சத்துக்கள் சரியாக செல்லவில்லை என்றால் இந்த நரை முடி பிரச்சனை ஏற்படும். அதாவது தலை முடிக்கு என்று சில சத்துக்கள் உள்ளது. அது சரியாக உடலில் இல்லை என்றால் இந்த முடி உதிர்வு நரை முடி என தலை முடிக்கு பிரச்சனை வந்துகொண்டு தான் உள்ளது. ஆகவே முடிக்கு தேவையான சத்துக்களை அறிந்து அந்த உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Narai Mudi Karupaga:
தேவையான பொருட்கள்:
- ஷாம்பு அல்லது சீயக்காய்
- கடுகு
- மிளகு
- கருஞ்சீரகம்
- நெல்லிக்காய் பொடி
- வெள்ளைக் காரிசலாங்கண்ணி பொடி
இந்த பொருட்கள் அனைத்தையும் உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்..!
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் கடுகு, மிளகு, கருஞ்சீரகம் என மூன்று பொருட்களையும் சேர்த்து கடாயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பொடி போல் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பொருளை அப்படியே ஒரு வடிகட்டி வைத்து பொடியை மட்டும் சலித்து எடுத்து கொள்ளவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉 இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்
அதனை இப்போது தனியாக எடுத்துக்கொள்ளவும். அதில் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி சேர்த்து அதனை நன்கு கலந்துவிடவும். அதன் பின் அதில் ஒரு முக்கியமான பொருள் சேர்க்கவேண்டும்.
அது என்னவென்றால் நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் அது கெமிக்கல் பொருள் இல்லாமல் இருந்தால் அதனை பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் சீயக்காய் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஷாம்பு என்றால் 1 ஸ்பூன் சீயக்காய் என்றாலும் 1 ஸ்பூன் எடுத்து கொள்ளவும். இப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி கருமையாக மாறும். அதேபோல் இதனை வாரத்திற்கு 2 முறை கூட செய்து கொள்ளலாம். ஆனால் இதனை தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் உங்கள் முடி நிரந்தரமாக கருப்பாக மாறிவிடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரு முடி கூட நரைக்காது..! இதை மட்டும் தடவி பாருங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |