முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க
ஆயில் ஸ்கின் முகமாக இருந்தாலே பிரச்சனை தான். ஏனென்றால் எண்ணெய் பசையாக இருந்தால் முகத்தில் பருக்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வலிந்து கொண்டே இருக்கும். இதற்காக கடைகளில் விற்கும் கிரீம்களை அப்ளை செய்வீர்கள். இதனால் உங்கள் முகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். முகத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இயற்கையான முறையில் எண்ணெய் பசையை நிரந்தரமாக நீக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க:
தக்காளி:
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் முகத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க தீர்வு
ஒரு தக்காளியை நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த தக்காளியை வடிகட்டியை வைத்து வடிக்கட்டி கொள்ளுங்கள்.
பின் வடிக்கட்டிய விழுதுடன் பசும் பால் 1 டம்ளர் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்பளை செய்து காலையில் முகத்தை காலையில் கழுவி விடுங்கள். இது போல் வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி பருக்கள் வராமல் தடுக்கும்.
கற்றாழை:
கற்றாழையின் தோலை நீக்கி உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்பளை செய்து காலையில் முகத்தை கழுவி விடுங்கள்.
ஐஸ்கட்டி:
ஐஸ்கட்டியை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை காட்டன் துணியை வைத்து துடைத்து விடுங்கள். பின் முகத்தில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் இரவு முழுவதும் வைத்திருந்தால் சில நபர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். அவர்கள் கற்றாழை ஜெல் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
இந்த குறிப்பை சளி, சைனஸ், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து அப்பளை செய்யுங்கள். நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |