வாரத்திற்கு 1 முறை இரவு தூங்கும் போது தடவினால் போதும் முடி நீளமாக கருமையாக வளரும்..!

Advertisement

தலை முடியை அடர்த்தியாக வெங்காயம் சாறு ஹேர் பேக் | Onion Hair Pack for Hair Growth in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் முடி உதிர்வை தடுக்கக்கூடிய மற்றும் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஒரு அருமையான Hair Growth Tips பற்றி தான் பார்க்க போகிறோம். உங்களுக்கு அதிக முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால் இன்று முதல் கவலையை விடுங்கள்.. உங்களுக்கானது தான் இந்த பதிவு. இந்த பதிவை முழுமையாக படித்து டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் இந்த டிப்ஸை வாரத்தில் ஒரு முறை மட்டும் பாலோ செய்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று முழுமையாக பரர்களாம்.

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் சாறு – 5 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு கை முளைக்கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

செய்முறை – Onion Hair Pack for Hair Growth in Tamil:

ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நான்கு ஸ்பூன் சுத்தமான தேங்காயை எண்ணெய், இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 5 ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் பேக் தயார்..

Onion Hair Pack பயன்படுத்து முறை:

இந்த ஹேர் பேக்கை இரவு தூங்கு செல்வதற்கு முன் தலைமுடி மற்றும் தலைமுடியின் உச்சியில் நன்றாக அப்ளை செய்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு மசாஜ் செய்வதினால் தலை முடிக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கும்.

பிறகு தலைக்கு cover with shower cap அல்லது டவல் பயன்படுத்தி கட்டிகொள்ளுகள் பிறகு தூங்க செல்லுங்கள் பின் மறுநாள் காலை எழுத்து நல்ல மையிட்டு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலை அலசுங்கள் இவ்வாறு வாரத்தில் செய்து வந்தாலே போதும் தலை முடி உதிர்வு நின்றும் தலை முடி நன்கு அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.

Onion Hair Pack Benefits in Tamil பயன்கள்:

வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இவற்றில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் தலை முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்யும். மேலும் தலை முடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

குறிப்பாக இந்த ஹேர் பேக்கில் உள்ள விளக்கெண்ணெய் மற்றும் வெங்காயம் சாறு கலவை தலை முடியை அடர்த்தியாக வளர உதவி செய்யும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 முடி கொட்டுவதை நிறுத்தி முடி நீளமாக அடர்த்தியாக 100% வளர இந்த ஹேர் டானிக்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement