முகம் 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்க

Face Glowing Remedies at Home

அனைவருக்கும் நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் நினைத்தது போல் யாருக்கும் முகம் இருக்காது. நீங்கள் ஏதாவது சுப நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது பார்லர் சென்று அழுகுபடுத்துவீர்கள். அதுவும் நீங்கள் என்ன தான் காசு கொடுத்து மேக்கப் போட்டாலும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான் முகம் பளபளப்பாக இருக்கும். அதனால் காசு கொடுத்து செலவு செய்யாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை எப்படி பளபளன்னு ஆக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

Permanent Face Glow:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் எண்ணெய்:

permanent face glow in tamil

தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும். எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடுகிறது. 

தேங்காய் எண்ணெயை சிறிதளவு சூடாக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் கழுவி விடவும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒன்று தடவை இரண்டு தடவை முகத்தில் அப்ளை செய்யவும்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பால்: 

permanent face glow in tamil

பால் உங்கள் முகத்தில் உள்ள அழுகுக்குகளை நீக்கி முகத்தை பளபளப்பாக்குகிறது. 

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி பச்சை பால், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும்.

முகத்தில் எண்ணெய் வழிகிறது என்ற கவலை வேண்டாம்.! இந்த 6 -ல் ஏதவாது ஒன்றை பயன்படுத்தவும்

பப்பாளி:

permanent face glow in tamil

பப்பாளி இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது.

பப்பாளியை சிறிய துண்டுகளாக கட் செய்து எடுத்து கொள்ளவும். கட் செய்த பப்பாளியை அரைத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளவும்.

தண்ணீர் குடிப்பது:

permanent face glow in tamil

தினமும் 8 ள்ளது 10 கிளாஸ் தண்ணீர் கட்டாயம்  குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதனால் உடலில் உள்ள நச்சு கிருமிகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

உணவு முறை:

permanent face glow in tamil

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதனால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பூர்த்தி செய்து நம் உடல் மற்றும் முகத்தை அழகாக வைத்து கொள்ள உதுவுகிறது.

ஒரு நாளைக்கு 7 அல்லது 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். சரியாக தூங்கினால் தான் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சி நிறைந்த சருமத்தை பெறலாம்.

முகத்தில் உள்ள குழிகளை மறைக்க ஐஸ் கட்டி, கற்றாழை முதல் இன்னும் சில குறிப்புகள்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil