ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Pimples Home Remedies

இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் முகப்பரு. முகத்தில் பருக்கள், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்க கூடாது என்று அனைவருமே நினைப்பார்கள். முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதனால் நாளடைவில் முகம் பொலிவிழந்து சருமத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் ஒரே வாரத்தில் பருக்களை மறைய செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சூடான நீரை எடுத்து கொள்ளவும்: 

சூடான நீரை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள். பின் அந்த நீரை வைத்து ஆவி பிடிக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடம் வரை ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பிரஷாக இருக்கும்.

ரோஸ் வாட்டர்: 

ரோஸ் வாட்டர்

அடுத்து ஒரு துணியை கொண்டு முகத்தை சுத்தமாக ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளவும். ரோஸ் வாட்டரை ஒரு காட்டன் பஞ்சு அல்லது காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.

முகத்தில் இருக்கும் பருக்கள் 3 நாட்களில் மறைய இந்த இலை மட்டும் போதும்..!

கற்றாழை ஜெல்: 

ரோஸ் வாட்டர் காய்ந்ததும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

Pimples Home Remedies in Tamil: 

multhaani metti

  1. முல்தானி மெட்டி – 1 ஸ்பூன்
  2. கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
  3. தேன் – 1/2 டீஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்

ஒரு பவுலில் முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள் தூள், தேன் மற்றும் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மட்டும் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடம் முகத்தில் அப்படியே இருக்கட்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

 முல்தானி மெட்டி சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்கி முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கவும், கரும்புள்ளிகளை மறைய செய்யவும் உதவுகிறது. தேன் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். முகம் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.

முகத்தில் இருக்கும் பருக்கள் மறையவே மாட்டேங்குதா..! அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..!

 

இதையும் படியுங்கள் ⇒ ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கி அழகான முகம் பெற குறிப்புகள் |

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement