அரிசி மாவில் கூட சரும அழகை அதிகரிக்கலாம்..! Rice Skin Whitening Face Packs..!

Rice flour for skin whitening in tamil

அரிசி மாவு அழகு குறிப்பு / Rice Skin Whitening Face Packs

Rice Skin Whitening Face Packs:- நாள் முழுவதும் வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வீட்டிற்கு வந்ததும் முதலில் நாம் கண்ணாடியில் நம் முகத்தைத்தான் பார்ப்போம். அப்போது அந்த முகத்தை நம்மால் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த கோடை வெயிலினால் சருமம் கருத்து, மாசு, தூசிகள் என முகம் அழுக்கு படிந்து சருமம் பொலிவிழந்து காணப்படும். இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனையை சரி செய்ய அரிசி மாவு ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது, அரிசி மாவுடன் சில வகையான பொருட்களை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வதினால். சரும கருமைகள் அனைத்தும் நீங்கி சருமம் பட்டு போல் காட்சியளிக்கும்.

சரி இங்கு அரிசி மாவை பயன்படுத்தி சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்..!

Rice flour for skin whitening in tamil / arisi maavu beauty tips in tamil

5 Types of Rice Skin Whitening Face Packs

Face Packs: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில், மூன்று ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்யவும், பின் 15 நிமிடங்கள் காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.

Face Packs: 2

Arisi maavu vaithu face a scrub pannalama in tamil: ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது Face Packs தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தினமும் செய்து வர சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

இனி அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சரும அழகை பாதுகாக்கலாம்..!

Face Packs: 3

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை தொடர்ந்து செய்து வர முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Face Packs: 4

அரிசி மாவு இரண்டு ஸ்பூன் மற்றும் காய்ச்சிய பால் இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாகும்.

Face Packs: 5

வாழைப்பழம் 1/2 துண்டுகள், விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் அரிசி மாவு இரண்டு ஸ்பூன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள். இந்த face pack-ஐ முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் உள்ள கருவளையம் மற்றும் முக கருமை நீங்கும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil