முடி வளர என்ன செய்ய வேண்டும் | Strong Hair Growth Tips in Tamil
அனைவர்க்கும் இந்த பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியும் உங்களுக்கு தெரியும் நான் எதை பற்றி சொல்கிறேன் என்று அது தாங்க தலை முடி கொட்டுவது அடர்த்தியாக இல்லாமல் ஒல்லியாக இருப்பது, என தலை முடி பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கிறது.
அதனை சரி செய்ய அனைவருமே நிறைய வழிமுறைகளை செய்து பார்த்திருப்பீர்கள். செய்த உடனே பலன் கிடைக்காது அதனை தொடர்ந்து செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
ஆகையால் இன்று இந்த டிப்ஸை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் முடி வளர்வதை உங்களாலே நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். வாங்க அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
Strong Hair Growth Tips in Tamil:
தலை முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல கொஞ்சம் நமது முடியை பராமரித்தால் போதும்.
முதலில் தலையை அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.
சிக்கு இல்லாமல் எடுத்த பின் தான் தலை முடியை பின்ன வேண்டும். தலை குளித்த பின் ஈரமாக இருக்கும் போது தலை முடியை பின்ன வேண்டாம். இது அனைத்தும் முடி கொட்டுவது, பொடுகு ஏற்படுவது, போன்ற பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். இப்போது தலை முடி அடர்தியாகவும் வலிமையாகவும் வளர இந்த டிப்ஸை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 200 கிராம்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl
செய்முறை:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் பின்பு அதில் கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து பவுடர் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
பின்பு வெந்தயத்தை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனையும் மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
சும்மா ட்ரை பண்ணுங்க 👉👉 கூந்தல் நீளமாக கருமையாக வளர தினமும் இந்த தேய்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள்..!
ஸ்டேப்: 4
இப்போது இன்னொரு சின்ன கிண்ணத்தில் 200 கிராம் தேங்காய் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரைத்து வைத்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கலந்து விடவும்.
ஸ்டேப்: 5
பிறகு நாம் கலந்து வைத்த தேங்காய் எண்ணெயை கிண்ணத்தை எடுத்து கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தில் வைக்கவும். அந்த தேங்காய் எண்ணெய் சற்று கொஞ்சம் சூடானதும் அதனை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 6
பிறகு தலைக்கு குளிக்கும் 1 மணி நேரத்திற்கு முன்பு அந்த எண்ணெயை தலை முடியின் வேர்ப்பகுதியில் தேய்க்கவும். பின்பு 1 மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு ஷாம்பு அல்லது சியாக்காய் போட்டு தேய்த்து குளித்து வந்தால் தலை முடி சூப்பராக வளரும் இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |