பற்கள் மஞ்சள் கறை போவது எப்படி?
நண்பர்களே வணக்கம் இன்று பற்களில் உள்ள கறை போக செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நிறைய வகையான பேஸ்ட் வைத்து பல் துலக்கி பார்த்தாலும் பற்களில் உள்ள கறை போகாது. இன்றைய பதிவில் பற்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு சுலபமான வழிகளை பற்றி பார்ப்போம்.
பல் கறை போவது எப்படி?
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள்
- உப்பு
- பேஸ்ட்
- பேக்கிங் சோடா
- பூண்டு
- இஞ்சி
- எலும்பிச்சை
டிப்ஸ்-1
முதலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பை எடுத்துக்கொள்ளவும் நன்கு பற்களில் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். இதனை தினமும் செய்தாலும் சரி இல்லையென்றால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதனை செய்தால் போதுமானது. இந்த மாதிரி செய்து பார்த்து அதன்பலன்களை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
டிப்ஸ்-2
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அதில் நீங்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை சிறிதளவு ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும்.
பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள கறை நீக்கிவிடும்.
டிப்ஸ் -3
ஒரு பிரஸ் எடுத்துக்கொள்ளவும். அதில் பேஸ்ட் வைத்து அதன் மீது பேக்கிங் சோடாவை தூவி விடவும்.
அதன் பின் அதனை எடுத்து பல் துவக்கவும். பல் துலக்கி விட்டு 10 நிமிடத்திற்கு பிறகு 2 தோலுரித்த பூண்டு எடுத்து கொள்ளவும்.
இந்த பூண்டை வாயின் கடவாய் பல்லில் வைத்து கடித்துக்கொள்ளவும். இந்த மாதிரி கடிப்பதனால் பற்களில் உள்ள சொத்தை மற்றும் கறை போய்விடும்.. இதனை வாரத்தில் இருமுறை செய்து வந்தால் போதும். பற்களில் எந்த பிரச்சனையும் கறையும் அண்டாது.
பற்கள் பராமரிப்பு |
டிப்ஸ் -4
முதலில் இஞ்சி எடுத்துக்கொள்ளவும் அதனை எடுத்து சாறாக பிழிந்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும். அதன் கூடவே உப்பு சேர்த்து நன்கு கலந்து கறை இருக்கும் இடத்தில் கைகளை வைத்து செய்தாலும் சரி அப்படி இல்லையேற்றால் பிரஸ் வைத்து தேய்த்துக்கொள்ளவும். இது போல் தினமும் இரண்டு வேளை காலை மற்றும் இரவு செய்தால் போதும்.
அப்படி செய்ய முடியாது என்றால் காலையில் மட்டும் செய்துவந்தால் உங்களுக்கு 2 அல்லது மூன்று நாட்களில் பற்களில் உள்ள கறைகள் அகன்றுவிடும். அதுமட்டுமில்லாமல் பூச்சி பற்கள் எதுவும் வாராது.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |