தலைமுடி அடர்த்தியாக வளர | Thalai Mudi Adarthiyaga Valara Tips in Tamil
தினமும் தலை முடி பிரச்சனைக்கு உதவி செய்யும் விதமாக நிறைய இயற்கை வழிகளை பதிவு செய்து வருகிறோம். அது அனைத்துமே நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் என்று நம்புகிறோம். பொதுவாக தேங்காய், கற்றாழை. வெந்தயம் என எப்போதும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு தான் டிப்ஸை சொல்லிருப்போம்.
இந்த பதிவில் வித்தியாசமான பொருட்களை கொண்டு உங்களின் முடிகளை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க நல்ல வழியாக இருக்கும் வாங்க பார்க்கலாம்..!
Thalai Mudi Adarthiyaga Valara Tips in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- ஆளிவிதை – 5 டேபிள் ஸ்பூன்
- புழுங்கல் அரிசி – 5 டேபிள் ஸ்பூன்
- முருங்கைக்கீரை – ஒரு கைபிடி
ஸ்டேப்: 1
முதலில் அரிசியை கழுவி கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
ஸ்டேப்: 2
பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்த அரிசியை போட்டு கொதிக்கவிடவும். அதில் தண்ணீர் இருக்கும் அதனை சேர்க்க தேவையில்லை வெறும் அரிசியை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதனை கொதிக்க விடவும்.
ஸ்டேப்: 3
அரிசி கொதிக்கும் போதே நாம் எடுத்துவைத்த ஆளிவிதையை 5 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனையும் கொதிக்கவிடவும். சிறிது நேரத்தில் அனைத்துமே சேர்ந்து ஒரு ஜெல் போல் வந்து விடும்.
இதையும் படியுங்கள்⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!
ஸ்டேப்: 4
அடுத்தது அடுப்பை அணைத்து ஒரு துணியை வைத்து வடிகட்டி ஆறவிக்கவும்.
ஸ்டேப்: 5
அடுத்து நாம் முருங்கை கீரையை உருவி கழுவிக்கொள்ளவும். ஏனென்றால் அதில் பூச்சிகள் இருக்கும் ஆகவே அதனை கழுவிக்கொள்ளவும். பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 6
அடுத்து பேஸ்டை ஒரு துணியை கொண்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது ஆளிவிதை ஜெல் ஆறி இருக்கும் அதில் இந்த கீரை சாறை சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து விடவும்.
பயன்படுத்தும் முறை:
எப்போதும் நாம் தலையில் தேய்த்து குளிக்க போகிறோம் என்றால் தலையில் எண்ணெய் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தேய்க்கும் பொருட்களை முடியின் வேர்வை போகும். ஆகவே இன்று நாம் இதனையும் அப்படி தான் தேய்க்க வேண்டும். தலையின் முடியை இரண்டாக பிரித்து அதில் நாம் செய்து வைத்த ஜெல்லை அப்ளை செய்ய வேண்டும். பின் 1 மணி நேரம் ஊறிய பிறகு ஷாம்பு சீயக்காய் போட்டு குளித்து விட்டால் முடி நன்றாக இருக்கும்.
தலையில் கை வைச்சாலே முடி கொட்டுதா…! அப்போ இனிமேல் இதை Follow பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |