முகத்தில் இருக்கும் பருக்கள் 3 நாட்களில் மறைய இந்த இலை மட்டும் போதும்..!

thiruneetru pachilai beauty tips in tamil

Thiruneetru Pachilai Uses For Face in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் திருநீற்று பச்சிலையை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த இலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த திருநீற்று பச்சிலை பூக்களை போல மனம் வீசும் ஒரு செடி ஆகும். இந்த செடிக்கு உருத்திரசடை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் உண்டு.

இதன் இலைகள் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், முக தழும்புகள் மற்றும் முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளை போக்கும் மூலிகையாக இருக்கிறது. அந்த வகையில் இதன் இலைகளை முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!

ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கி அழகான முகம் பெற குறிப்புகள்

Thiruneetru Pachilai Beauty Tips in Tamil: 

 முகத்தில் உள்ள கருப்பு மறைய

குறிப்பு:1

இந்த திருநீற்று பச்சிலையின் 2 அல்லது 3 இலைகளை எடுத்து கையில் வைத்து கசக்கி அதன் சாறை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேலும் முகம் பொலிவுடனும் இருக்கும்.

குறிப்பு:2

இந்த இலைகளுடன் சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதுபோல வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். அதுபோல முகத்தில் இருக்கும் பருக்களும் மறையும்.

குறிப்பு:3 

இதன் இலைகளை பறித்து அதை 3 நாட்கள் நிழலில் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் காய வைத்த இந்த இலைகளுடன் 25 கிராம் வசம்பு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இவை இரண்டையும் பொடி போல அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பொடியை தினமும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து அதில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து குழைத்து முகத்திற்கு பூச வேண்டும்.

இதுபோல செய்து வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். அதுமட்டுமில்லாமல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மறையும். முகம் பொலிவுடன் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் இந்த தவறை செய்தால் பருக்கள் வந்து கொண்டே இருக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil