வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளியுடன் இதை கலந்து போட்டால் போதும் நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முகம் பளப்பளப்பாகும்..!

Updated On: March 22, 2023 8:00 AM
Follow Us:
Tomato Face Pack For Glowing Skin in Tamil
---Advertisement---
Advertisement

Tomato Face Pack For Glowing Skin in Tamil

இன்றைக்கு இருக்கும் மாசு நிறைந்த உலகத்தில் அனைவருக்குமே சரும பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. முகம் பளப்பளப்பாக இருக்க பலரும் சில கிரீம்களை முகத்திற்கு அப்ளை செய்து சருமத்தை பளப்பளப்பாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த கிரீம்களை தொடர்ந்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் சருமத்திற்கு பல தீங்குகள் உண்டாகும். எனவே முகத்திற்கு இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருவது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் இயற்கை பொருளான தக்காளியை வைத்து முகத்தை எப்படி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பது என்பதை பார்க்கலாம் வாங்க.

 Tomato Face Pack in Tamil:

 how to make tomato face pack at home in tamil

தக்காளி பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • தக்காளி- 2
  • கடலை மாவு- 1 1/2 ஸ்பூன்
  • கஸ்தூரி மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
  • முல்தானி மெட்டி  1 ஸ்பூன் 
  • சோள மாவு- 1 ஸ்பூன் 
தக்காளி ஒன்று போதும்..! ரோஜா செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்..

 

How to Make Tomato Face Pack at Home in Tamil:

முதலில் தக்காளியை நன்றாக கழுவி விட்டு வெஜிடபிள் சாப்பர் வைத்து தேய்த்து தக்காளி சாறை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். இந்த தக்காளி சாறை பயன்படுத்தி தான் மூன்று விதமான தக்காளி பேஸ் பேக் செய்ய போகிறோம். இந்த மூன்று விதமான தக்காளி பேஸ் பேக்கில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.

 tomato face pack in tamil

தக்காளி பேஸ் பேக் செய்யும் முறை: 1

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 1/2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு சாறுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! செம கலரா ஆகிடுவீங்க..!

தக்காளி பேஸ் பேக் செய்யும் முறை: 2

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

தக்காளி பேஸ் பேக் செய்யும் முறை: 3

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தக்காளி சாறு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் சோள மாவு சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

 tomato face pack in tamil

முதலில் உங்கள் முகத்தை காய்ச்சாத பால் வைத்து தேய்த்து கொள்ளுங்கள். பிறகு 5 நிமிடம் கழித்து தண்ணீரில் நன்றாக முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள தக்காளி பேஸ் பேக்கில் ஏதேனும் ஒன்றை முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவி விடுங்கள்.

மேலே கொடுத்துள்ள மூன்று தக்காளி பேஸ் பேக்கிற்கும் இதே போன்று அப்ளை செய்து கொள்ளுங்கள். இந்த தக்காளி பேஸ் பேக்கை நீங்கள் தொடர்ந்து பயப்படுத்தி வருவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக மாறி எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..! வெறும் 2 பொருள் போதும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now