நரை முடி கருப்பாக மாற | Black Hair Tips Tamil
நரை முடி பிரச்சனைக்கு நிறைந்தரமாக தீர்வு காண இந்த பதிவு உதவியாக இருக்கும். பொதுவாக நரை முடி வயதானவர்களுக்கு தான் இருக்கும். ஆனால் இப்போது வயது குறைவாக உள்ளவர்களுக்கும் இந்த நரை முடி பிரச்சனை இருந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்று நிறைய எண்ணெய்களையும், ஷாம்புக்களை வாங்கி தலையில் அப்ளை செய்து நிரந்தரமாக தலை முழுவதும் நரை முடியை வரவழைக்கின்றோம். ஆகவே கடையில் விற்கும் கெமிக்கல் கலந்த எண்ணெய்களை வாங்கி அப்ளை செய்வதை தவிர்த்து விடுவோம்..!
சரி நரை முடி சிறுவர்களுக்கு வர காரணம் என்ன..? பொதுவாக உடலுக்கு தேவையான சத்துக்கள் இருந்தால் நரை முடி வராது. ஆனால் தேவையான சத்துக்கள் இல்லையென்றால் நரை முடி, முடி உதிர்வு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பதிவின் வாயிலாக நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு தீர்வை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நரை முடி கருப்பாக மாற:
முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். அதில் 1 டம்ளர் அளவில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பை வைத்து கொதிக்க விடவும்.
அதன் பிறகு 1 ஸ்பூன் உப்பு அந்த கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.
அதன் பிறகு அந்த கொதிக்கும் தண்ணீரில் அதே ஸ்பூனில் 4 ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும். அந்த தண்ணீர் அப்படியே கொதிக்கவிடவும்.
அந்த 1 டம்ளர் தண்ணீரை அப்படியே 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு அதன் பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனை இரவு தூங்குவதற்கு முன்பு தலையில் எங்கு நரை முடி உள்ளதோ அங்கு வடிகட்டி வைத்துள்ள தண்ணீரை அப்ளை செய்யவும். மறுநாள் காலையில் தலையை அப்படியே குளிக்கவும். தலையில் எந்த ஷாம்பையும் பயன்படுத்துவது கூடாது.
வேரிலிருந்து நரைமுடியை கருமையாக மாற்றும் அதற்கு தூக்கி எரியும் இந்த 2 பொருள் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |