2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?

next sani peyarchi 2023 date

அடுத்த சனி பெயர்ச்சி எப்போது 2023

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் படிக்கும் போதே யாருக்கு அடுத்த சனிப்பெயர்ச்சி இருக்கு என்று ஒரு பயத்தில் படிப்பீர்கள்..! ஆனால் சனி பகவான் எந்த அளவிற்கு கஷ்டங்கள் தருகிறாரோ அந்த அளவிற்கு நன்மையும் விளைவிப்பார். அதனால் பயம்கொள்ள வேண்டாம்..! சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார் என்றால் அவர் மறுமுறை அந்த ராசிக்கு வருவதற்கு 30 வருடம் எடுத்துக்கொள்வாராம். ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது அவருடைய பார்வை எந்த ராசியில் அமர்கிறாரோ அந்த ராசிக்கு முன் மற்றும் பின் இருக்கும் ராசிக்கும் சனிப்பெயர்ச்சி நடக்குமாம்..! சரி இந்த வருடம் யாருக்கு சனி பெயர்ச்சி மற்றும் யாருக்கு சனிப்பெயர்ச்சி விடை கிடைக்கப்போகிறது என்று தெரிந்துகொள்வோம்..!

ஏழரை சனி நடக்கும் ராசிகள் 2022:

சனி பெயர்ச்சியானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதிவரை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வேகமாக முன்னோக்கி சென்றார்.

ஜூலை 12 ஆம்  தேதி வரை வக்ர நிலையாக அதாவது பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசிக்கு வந்து சேர்ந்தார்.

வரும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி வரை மகர ராசியில்  வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்பு சாதாரணமாக நேர் பார்வையில் நகர்வார்.

கடைசியில் புதுவருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

அடுத்த சனி பெயர்ச்சி எப்போது 2023:

புதுவருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் அடுத்த சனிப்பெயர்ச்சி என்பதை நினைத்தால் அந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மனக்கஷ்டம் வரும். ஆனால் இது அனைவரின் ராசிகளுக்கும் நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அதனால் எதுவாக இருந்தாலும் அதனை மறந்து வாழ்வது தான் வாழ்கை.

இந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்து  மகர ராசியிலிருந்து நகர்ந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மகர ராசிக்கு துன்பங்கள் நீங்கும் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுதான் சனியின் பகவானின் கடைசி காலம் என்பதால் அந்த ராசிகாரர்களுக்கு நன்மைகள் நடக்கும். துன்பங்கள் நீங்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனிப்பெயர்ச்சி ஆரம்பிக்கும். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் நன்மை கிடைக்கும்.

மீனா ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கும்.

🙏நன்மையே நினைப்போம் அனைவருக்கும் நன்மையே நடக்கும் 🙏

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்