Advertisement
உப்பை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்
நாம் எந்த சமையல் செய்தாலும் உப்பு மிகவும் அவசியம். உணவில் சால்ட் உப்பை சேர்ப்பதை விட கல் உப்பு சேர்த்தால் நமக்கு நிறையவே நன்மைகளை செய்யக்கூடியவை. ஜோதிடத்தை பொறுத்தவரை கல் உப்பு சகல செல்வங்களை அள்ளி தரும் ஐஸ்வர்யமாக கருதப்படுகிறது. செல்வ வளத்தை அள்ளித்தரும் உப்பை நாம் எங்கு வைத்தால் நல்லது தெரியுமா..! தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.
உப்பை இந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்
- முந்தைய காலத்தில் இருந்த வீட்டில் நாம் கல் உப்பு இல்லாத வீட்டையே பார்க்க முடியாது ஆனால் இப்போது எல்லோரும் சால்ட் உப்பை தான் அதிகம் விரும்புகிறார்கள்.
- கடலில் குடிகொண்டிருக்கும் நாராயணர் மற்றும் மகாலட்சுமியின் அம்சமாக சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்படும் உப்பு பார்க்கப்படுகிறது. எனவே இந்த பொருளை எப்போதும் வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கெட்ட சக்தி நீங்க:
- நம் வீட்டில் தீய சக்தி இருக்க நாம் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். கெட்ட சக்தி நம் வீட்டில் இருந்து விலகுவதற்கு கல் உப்பை சிகப்பு துணியில் கட்டி வாசலில் தொங்க விட வேண்டும்.
செல்வ வளம் குறையாமல் இருக்க:
- நம் வீட்டில் எப்போதும் செல்வ வளம் அதிகரிக்கவும், குறையாமல் இருப்பதற்கும் நீங்கள் எங்கு அமர்ந்து சாப்பிடுவீர்களோ அங்கு அல்லது சாப்பாட்டு டேபிளில் உப்பை வைத்தால் செல்வம் அதிகரித்து கொண்டே இருக்கும்.
வறுமை நீங்க:
- Uppu Vaikum Idam: ஒரு சிலர் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் ஏழ்மை தலை விரித்தாடும், அப்படிபட்டவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.
- நீரின் நிறம் மாறினால் அதை செடியில் ஊற்றி விட்டு நீர் மற்றும் உப்பு மாற்றி வைக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களின் வறுமை உங்களை விட்டு நீங்கிவிடும், வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
உங்களிடம் உள்ள தீய சக்திகள் விலக:
- நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பு குளிக்கும் பாத்திரத்தில் அல்லது டப்பில் ஒரு கையளவு கடல் உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் குளித்து வந்தால் உங்களிடம் உள்ள தீய சக்திகள் விலகும். இதனை நீங்களே உணர்விர்கள்.
எதிர்மறை எண்ணங்கள் விலக:
- வீட்டில் உப்பு வைக்கும் இடம்: நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது உப்பு நீரால் முழு விட்டையும் கழுவ வேண்டும்.
- இவ்வாறு செய்தால் எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதை ஞாயிற்றுகிழமை மட்டும் செய்ய வேண்டாம்.
பண வரவு அதிகரிக்க:
- உப்பு வைக்கும் இடம்: உப்பை பீங்கான் பாத்திரத்தில் வைப்பது நல்லது. பிளாஸ்டிக் டப்பாவில் அல்லது சில்வர் பாத்திரத்தில் வைத்தால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும்.
- உப்பை எப்போதும் உங்களின் உயரத்திற்கு மேல் வைத்தால் நல்லது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும், தங்கம் மளமளவென அதிகரிக்கும் என்கிறது சாஸ்திரம்.
கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்.. |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement