கண்டக சனி என்ன செய்யும் | Kantaka Sani Effects in Tamil

Kantaka Sani Tamil

கண்டக சனி என்ன செய்யும் | கண்டக சனி | Kantaka Sani Tamil

Kantaka Shani Effects in Tamil: நம்மில் பலருக்கும் சனி பெயர்ச்சி ஆரம்பித்தவுடன் எந்த மாதிரியான சனி பெயர்ச்சி நம் ராசிக்குள் வந்துள்ளது அது என்ன செய்ய போகிறதோ என்ற பயம் இருக்கும். ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி போன்ற சனி பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் நாம் இன்றைய ஆன்மிக பதிவில் கண்டக சனி என்றால் என்ன? கண்டக சனி நம் ராசியில் இருந்தால் என்ன செய்யும் என்பதை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கண்டக சனி என்றால் என்ன? | கண்டக சனி விளக்கம்:

 • ராசியில் நடைபெறும் ஒவ்வொரு சனி பெயர்ச்சியும் நம் ராசியில் இருக்கும் சந்திரனை பொறுத்தே அமைகிறது, லக்னத்தை பொறுத்து அமைவது அல்ல.
 • கோச்சார சனி துலாம் ராசிக்கு வரும் பொழுது அதாவது சந்திரன் 7-ம் இடத்திற்கு வருவது கண்டக சனி. ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது.

கண்டக சனி என்றால் என்ன? – கண்டக சனி விளக்கம்:

 • கழுத்தை பிடிக்கும் அளவிற்கு உங்களுக்கு பிரச்சனை இருக்கும், எப்படி குரல் வளையை பிடித்தால் மூச்சு விடாமல் சிரமம் ஏற்படுமோ அதேபோன்று சிரமம் அதிக அளவிற்கு இருக்கும்.
 • சனி பகவான் சந்திரனுக்கு முன் அல்லது சந்திரனுக்கு பின் அல்லது சந்திரனோடு சேர்ந்து பயணித்தால் அதற்கு ஏழரை சனி என்று பெயர். அதேபோன்று சனி தேவர் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது கண்டக சனி.

கண்டக சனி என்ன செய்யும் – Kantaka Shani 2021 in Tamil:

 • கண்டக சனி உங்கள் ராசிக்கு வந்தால் கணவன் மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
 • இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளித்து வந்த மனைவி உங்கள் கருத்திற்கு எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார்கள். கணவன் மனைவி உறவுக்குள் ஒற்றுமை வலுப்பட குடும்பத்தில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது.
 • கண்டக சனி இருக்கும் போது வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

Kantaka Sani Effects in Tamil – கண்டக சனி என்ன செய்யும்:

 • எப்பொழுதும் நன்றாக மதிப்பெண்கள் பெற்று வந்த உங்களது குழந்தைகளின் படிப்பில் மந்தம் ஏற்படும்.
 • வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். பணி  புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பணியிட சூழல் சாதகமாக இருக்காது, பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • உங்கள் ராசியின் 7-ல் சனி இருந்தால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கண்டக சனி – Kantaka Sani Meaning in Tamil:

 • எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னரும் யோசித்து செயல்படுங்கள், அது உங்களுக்கு நற்பலன்களை அளிக்கலாம்.
 • எல்லா ராசிக்கும் ஒரே மாதிரியனா பலன்கள் நடைபெறுவது இல்லை ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜாதக அமைப்பை பொறுத்தே அமையும்.
ஜென்ம சனி என்றால் என்ன?
குரு பெயர்ச்சி 2021 to 2022 எப்போது வருகிறது?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்